தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஆடம் சார்லசு வோஜசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 4 அக்டோபர் 1979 சுபியாக்கோ, மேற்கு ஆஸ்திரேலியா, ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | கென்னி, ஹாங்க் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 187 செமீ (6 அடி 2 அங்)[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | மென் இடக்கை மரபுவழா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 442) | 3 சூன் 2015 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 20 ஆகத்து 2015 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 163) | 20 பெப்ரவரி 2007 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 2 நவம்பர் 2013 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 28) | 11 டிசம்பர் 2007 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 13 பெப்ரவரி 2013 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2002–2015 | மேற்கு ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007 | ஆம்ப்சயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2012 | நோட்டிங்கம்சயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2010 | ராஜஸ்தான் ராயல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011 | மெல்பர்ன் ஸ்டார்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012–2014 | பெர்த் ஸ்கோர்ச்சர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013–2015 | மிடில்செக்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 11 டிசம்பர் 2015 |
ஆடம் சார்லஸ் வோஜசு (Adam Charles Voges, பிறப்பு: 4 அக்டோபர் 1979) முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மிடில்செக்சு, மேற்கு ஆத்திரேலிய அணிகளின் தலைவராகவும் விளையாடியுள்ளார். இவர் 2015 சூன் மாதத்தில் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடினார்.[2] இவரின் தேர்வுத் துடுப்பாட்ட சராசரி 61.87 ஆகும். 20 தேர்வுப் போட்டிகளுக்கு மேல் விளையாடியவர்களில் டான் பிராட்மனுக்கு அடுத்தபடியாக உள்ளார். 2016 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் கனவுத் தேர்வு அணியில் இவர் இடம்பெற்றார்.
அக்டோபர் , 2012 ஆம் ஆண்டில் மார்கஸ் நார்த் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியதால் இவர் வெஸ்டர்ன் ஆத்திரேலிய அணியின் பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டார். பிக் பாஷ் தொடரின் முதல் பருவத்தில் இவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினார். அதற்கு அடுத்த பருவத்தில் பெர்த் ஸ்கார்செர்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் இவர் ஹாம்ப்ஷயர், நாட்டிங்காம்ஷயர், மற்றும் மிடில்செக்ஸ் அணிகளுக்காக இங்கிலாந்து மாகாணத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். 2010 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் ஜமைக்கா அணிக்காக விளையாடினார்.
சூன் 3, 2015 இல் ரூசோவில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 332 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 130 ஓடங்கள் எடுத்தார். இதில் 13 நான்குகளும் 1 ஆறுகளும் அடங்கும். இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 9 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்று சாதனை படைத்தார்.[3][4][5]
டிசம்பர் 11,2015 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ரிக்கி பாண்டிங்கின் 209 ஓட்டங்கள் எனும் சாதனையையும், டக் வால்டர்ஸ்சின் சாதனையான 242 ஓட்டங்கள் எடுத்த சாதனையையும் முறியடித்தார். மேலும் இந்த அணிக்கு எதிராக இருநூறு ஓட்டஙகளையும் அடித்தார். இதன்மூலம் அதிக வயதானவர்கள் ஆத்திரேலிய அணிக்காக இருநூறு அடித்தவர்கள்வரிசையில் நான்காவது இடம்பிடித்தார். இதற்கு முன்னதாக டான் பிராட்மன், அலன் போடர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் இந்தச் சாதனையைப் புரிந்தனர். ஜேக் ரைடர் மட்டுமே 35 ஆவது வயதில் இருநூறு அடித்தார்.
பெப்ரவரி 20,2007 இல் ஆமில்டன், நியூசிலாந்தில் நடந்த நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 1 ஆறு ஓட்டங்கள் அடங்கும். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 1 இலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[6]
டிசம்பர் 11, 2007 இல் பெர்த்தில் நடைபெற்ற பன்னாட்டு இருபது20 போட்டியில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்தார்.[7]
ஆடம் வோஜசின் தேர்வுச் சதங்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | ஓட்டங்கள் | ஆட்டம் | எதிராக | நகரம்/நாடு | அரங்கு | ஆண்டு | முடிவு |
1 | 130* | 1 | மேற்கிந்தியத் தீவுகள் | உறொசோ, டொமினிக்கா | வின்சர் பூங்கா | 2015 | வெற்றி |
2 | 119 | 9 | நியூசிலாந்து | பேர்த், ஆத்திரேலியா | மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம் | 2015 | சமம் |
3 | 269* | 11 | மேற்கிந்தியத் தீவுகள் | ஹோபார்ட், ஆத்திரேலியா | பெல்லரைவ் ஓவல் அரங்கம் | 2015 | - |
ஆடம் வோஜசின் பன்னாட்டு ஒருநாள் சதங்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | ஓட்டங்கள் | ஆட்டம் | எதிராக | நகரம்/நாடு | அரங்கு | ஆண்டு | முடிவு |
1 | 112* | 17 | மேற்கிந்தியத் தீவுகள் | மெல்பேர்ண், ஆத்திரேலியா | மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் | 2013 | வெற்றி |
வ எ | தொடர் | ஆண்டு | செயல்பாடு | முடிவு |
---|---|---|---|---|
1 | ஃபிரான்க் வாரல் தொடர் | 2015/16 | ஓட்டங்கள்: 375 (2 நூறுகள்); ஆட்டப்பகுதி – 2, – 2, சராசரி – NA, ஸ்டிரைக் ரேட் – 83.14 (3 போட்டிகள்) | ஆத்திரேலியா 2–0 எனும் கணக்கில் தொடரை வென்றது.[8] |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)