நிகிதா காந்தி | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | அக்டோபர் 2, 1991 கொல்கத்தா, இந்தியா |
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகர் |
தொழில்(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 2013–தற்போது வரை |
நிகிதா காந்தி (Nikhita Gandhi (பிறப்பு 1991) ) என்பவர் இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழி இந்தியத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.[1]
இவர் தீபிகா படுகோண் நடித்து சூன், 2017 இல் வெளிவந்த ராப்தா எனும் திரைப்படத்தில் ராப்தா எனும் பாடலைப் பாடினார்.[2] மேலும் ஜக்கா ஜசூஸ் எனும் இந்தித் திரைப்படத்திற்காக உல்லு க பதா எனும் பாடலை அரிஜித் சிங்குடன் இணைந்து பாடினார். இந்தப் பாடல் பெரிய வெற்றி பெற்ற பாடலாக அமைந்தது[3]. சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ், செஃப் (2017 திரைப்படம்) ஹேரி மெட் செஜல் போன்ற திரைப்படங்களிலும் பின்னணிப் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் இவர் 2017 இல் வெளிவந்த காக்பிட் எனும் வங்காள மொழித் திரைப்படத்தில் அதிஃப் அஸ்லாமுடன் இணைந்து பாடல் பாடினார்.
நிகிதா காந்தி அக்டோபர் 2, 1991 இல் கொல்கத்தா, இந்தியாவில் பிறந்தார். இவர் வங்காளம்- பஞ்சாப் குடும்பத்தைச் சேர்ந்தவர். சென்னையில் கல்லூரிப் படிப்பைப் பயின்றார். ஒடிசி (நடனம்) மற்றும் இந்துஸ்தானி இசையை பன்னிரன்டு வருடங்களாகக் கற்றார்.[4]
கொல்கத்தாவின் , பஞ்சாப் மற்றும் வங்காள மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார். பல் மருத்துவம் பயில்வதற்காக 2010 ஆம் ஆண்டில் இவர் சென்னை சென்றார்.[5] ஏ. ஆர். ரகுமானுடைய கே. எம். இசை மற்றும் தொழிநுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.
தனது சொந்த படமனையின் தயாரிப்பில் சில பாடல்களைப் பாடினார். பின்பு சில பிராந்தியப் பாடல்களைப் பாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றார். ஷங்கரின் இயக்கத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் ஜனவரி 14, 2015 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படத்தில் லேடியோ எனும் பாடலைப் பாடினார். தமிழ் தெரியாத காரணத்தினால் பாடல் வரிகளை இந்தியில் எழுதி வைத்துப் பாடலைப் பாடினார். இந்தப் பாடலை நான்கு மணி நேரத்தில் ஒலிப்பதிவு செய்தனர். அதன் பிறகு தெலுங்கு, மற்றும் இந்தி மொழிப் பதிப்பிற்கான பாடல்களையும் பாடினார். இந்த பாடல்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது[1]. 2015 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் , வைரமுத்து எழுதிய தீரா உலா எனும் பாடலைப் பாடினார். மேலும் அதே ஆண்டில் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பில் உருவான தங்க மகன் (2015 திரைப்படம்) திரைப்படத்தில் ஓ ஓ எனும் பாடலை தனுஷ் (நடிகர்) உடன் இணைந்து பாடினார்.
திரைப்படங்களில் பின்னணி பாடுவதைத் தவிர அவர் ஒரு இசைக்குழுவில் உள்ளார். இந்த இசைக்குழுவானது கேரளா மற்றும் கொல்கத்தா போன்ற மாநிலங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சஜித் சத்யா, ஜெரார்டு ஃபீலிக்சு, காட்ஃபிரே இம்மானுவேல் மற்றும் ஜோசுவா கோபால் ஆகிய ஐந்து பேர் உள்ளனர்.[4]
ஜீ சினிமா விருதுகள் 2018 இல் சிறந்த பெண் பின்னணிப் பாடகராக தேர்வு செய்யப்பட்டார். ராப்தா திரைப்படத்தில் இடம்பெற்ற ராப்தா எனும் பாடலைப் பாடியதற்காக இந்த விருது கிடைத்தது.[6]
ஜப் ஹேரி மெட் செஜல் எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற கர் எனும் பாடலைப் பாடியதற்காக 2018 ஜியோ பிலிம் பேர் விருதிற்கு சிறந்த பெண் பின்னணிப் பாடகி பிரிவில் இவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும் 2018 ஜியோ பிலிம் பேர் விருதிற்கு (கிழக்கு) சிறந்த பெண் பின்னணிப் பாடகி பிரிவில் இவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெஹ்நாத் போத்
ரொஹாஷ்யா எனும் வங்காள மொழி திரைப்படத்தில் தோம்ரா எனும் பாடலைப் பாடியதற்காக இவர் பரிந்துரை செய்யப்பட்டார்.[7]
காந்தி. ஐ எம் டி பி வலைத்தளம் http://நிகிதா[தொடர்பிழந்த இணைப்பு]