பியூரன் ஹேன்ட்ரிஸ்க் (Beuran Hendricks, பிறப்பு: சூலை 8 1990), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 41 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2010 -2013 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இடதுகை மட்டையாளரான இவர், இடதுகை மித வேகப் பந்துவீச்சாளராகவும் இருந்து வருகிறார். இவர் தேசிய தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி தவிர கேப் கோப்ராஸ், இம்பி, கிங்சு லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், தென்னாப்பிரிக்க அ அணி, செயிண்ட் லூசியா சூக்ச், மேற்கு மாகாணத் துடுப்பாட்ட அணி, மேற்கு மாகாண 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட அணி ஆகிய துடுப்பாட்ட அணிகளிலும் இவர் விளையாடி வருகிறார்.
2012/13 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். அந்தத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 35 இலக்குகளை கைப்பற்றினார். இதன் மூலம் அவர் சர்வதேச துடுப்பாட்ட அணியில் விளையா டும் வீரர்களை தேர்வு செய்பவர்கள் கவனத்தை ஈர்த்தார்.. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான குளிர்கால துடுப்பாட்டப் போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 11 விளக்குகளை கைப்பற்றியதன் மூலம் இவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்காநா முக்கியக் காரணமாக அமைந்தது.இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தமானார்.[1]
ஆகஸ்ட் 2017 இல், டி 20 குளோபல் லீக்கின் தொடரின் முதல் பருவத்தில் இவர் ப்ளூம் சிட்டி பிளேஜர்ஸ் அணியில் இடம் பெற்றார்.[2] இருப்பினும், அக்டோபர் 2017 இல், தென்னாப்பிரிக்கா துடுப்பாட்ட வாரியம் நவம்பர் 2018 ஆம் ஆண்டு வரை இந்தப் போட்டியை நடத்த இயலாது என ஒத்திவைத்தது பின்பு டிசம்பர் மாதம் அந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[3]
ஜூன் 2018 இல் 2018 19 ஆம் ஆண்டிற்கான தொடரில் இவர் லயன்ஸ் அணி சார்பாக விளையாடினார். அக்டோபர் 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற மான்சி சூப்பர் துடுப்பாட்ட தொடரில் இவர் ஜோ சி சார்பாக விளையாடினார்
2018–19 ஹைவெல்ட் லயன்ஸ் அணிக்கான அணியில் இடம் பெற்றார்.[4] அக்டோபர் 2018 இல், மன்சி சூப்பர் லீக் டி 20 போட்டியின் முதல் பருவத்திற்கான தொடரில் இவர் ஜோஸி ஸ்டார்ஸ் அணியில் இடம் பெற்றார்.[5][6]
2018-19 ஆம் ஆண்டிற்கான சி எஸ் ஏ நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடரில் இவர் லயன்ஸ் அணி சார்பாக விளையாடினார். அந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி எட்டு போட்டிகளில் விளையாடி 32 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய லயன்ஸ் வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பிடித்தார்.[7] 2019 மன்சி சூப்பர் லீக் தொடரில் இவர் நெல்சன் மண்டேலா பே ஜண்ட்சு அணிக்காக விளையாட இருப்பதாக செப்டம்பர் 2019 இல் அறிவிப்பு வெளியானது.[8]
2019 ஆம் ஆண்டில் இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சனவரி 25, செஞ்சூரியனில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட ணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அரிமுகமானார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
பியூரன் ஹேன்ட்ரிஸ்க் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 8 2014.