லக்ஷ்மன் கிரியெல்ல | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் கண்டி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெப்ரவரி 2, 1948 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | சட்டத்தரணி |
லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella, பிறப்பு: பெப்ரவரி 2 1948), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.இவர் 2015 செப்டம்பர் 4 அன்று பெருந்தெருக்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]
121/1, பஹலவெல ரோட், பெலவத்தை, பத்தரமுல்லையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், ஒரு சட்டத்தரணியும் கூட
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)