விமலா ராமன் Vimala Raman | |
---|---|
![]() | |
பிறப்பு | சனவரி 23, 1984 சிட்னி, ஆஸ்திரேலியா |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2006–இன்று |
உயரம் | 1.68 மீட்டர் |
விமலா ராமன் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். கே. பாலச்சந்தர் இயக்கிய பொய் (2007) திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும், இந்தித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விமலா, ஜெயலட்சுமி கந்தையாவிடம் முறைப்படி பரத நாட்டியம் பயின்று 2000வது ஆண்டில் அரங்கேறினார். கணினித்துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற விமலா தரவுத்தள ஆய்வாளராகத் தொழிலாற்றுகிறார். 2006 ஆண்டில் இவர் ஆஸ்திரேலிய இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1]
2004 ஆம் ஆண்டில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் பொய் தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விமலா ராமன் 2007 ஆம் ஆண்டில் டைம் என்ற மலையாளப் படத்தில் சுரேஷ் கோபியுடன் நடித்து மலையாளத் திரைக்கு அறிமுகமானார். நஸ்ரானி என்ற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடனும், மோகன்லாலுடன் காலேஜ் குமரன் படத்திலும் நடித்தார். பொய் படத்திற்குப் பின்னர் ராமன் தேடிய சீதை என்ற தமிழ்த் திரைப்படத்தில் சேரனுடன் இணைந்து நடித்தார். டேம் 999 என்ற பன்னாட்டு ஆங்கிலத் திரைப்படத்தில் சோகன் ராய் இயக்கத்தில் நடித்தார்.
படம் | மொழி | இயக்குநர் | தயாரிப்பு | ஏனைய நடிகர்கள் | ஆண்டு |
---|---|---|---|---|---|
பொய் | தமிழ் | கே. பாலசந்தர் | பிரகாஷ் ராஜ் | உதய் கிரண் | 2007 |
டைம் | மலையாளம் | ஷாஜி கைலாஸ் | பாக்யசித்ரா பில்ம்ஸ் | சுரேஷ் கோபி | 2007 |
பிரணயகாலம் | மலையாளம் | உதயன் | ஏவிஏ பில்ம்ஸ் | அஜ்மல் அமீர் | 2007 |
சூரியன் | மலையாளம் | வி.எம்.வினு | ஜெயராம் | ||
நஸ்ராணி | மலையாளம் | ஜோஷி | எம். ராஜன் | மம்முட்டி | |
ரோமியோ | மலையாளம் | ராஜசேனன் | ராஃபி மெகார்ட்டின் | திலீப் | |
கல்கத்தா நியூஸ் | மலையாளம் | பிளெசி | தம்பி அந்தோனி | திலீப் | |
காலேஜ் குமரன் | மலையாளம் | மோகன்லால் | |||
ராமன் தேடிய சீதை | தமிழ் | ஜகன்சி | ரஞ்சிதா | சேரன் | 2008 |
டுவெண்டி:20 | மலையாளம் | மோகன்லால், மம்முட்டி | 2008 | ||
அபூர்வா | மலையாளம் | 2009 | |||
எவரெய்னா எப்புடெய்னா | தெலுங்கு | 2009 | |||
கன்னடம் | 2010 | ||||
சுக்களாந்தி அம்மை சக்கனைனா அப்பாய் | தெலுங்கு | நடிப்பில் | |||
ரங்கா த டொஙா | தெலுங்கு | நடிப்பில் | |||
காயம் 2 | தெலுங்கு | நடிப்பில் | |||
டேம் 999 | ஆங்கிலம்[2] | சோகன் ராய் | நடிப்பில் |