வீ. கே. சமரநாயக்க

வீ. கே. சமரநாயக்க
V. K. Samaranayake
பிறப்பு1939
கொழும்பு, இலங்கைஇலங்கை
இறப்புஜூன் 6, 2007
சுவீடன்சுவீடன்
பணிகணினித்துறைப் பேராசிரியர்
வாழ்க்கைத்
துணை
சிறியா சமரநாயக்க

"வித்யா ஜோதி" பேராசிரியர் வீ. கே. சமரநாயக்க (1939ஜூன் 6, 2007) இலங்கையில் கணினி மற்றும் தகவல் தொடர்பாடல் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இதனால் தான் இவர் "இலங்கையின் கணினித் துறையின் தந்தை" என அழைக்கப்படுகின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக கடமையாற்றிய பேராசிரியர் வீ. கே. சமரநாயக்க ஒரு கணினி விஞ்ஞானப் பேராசிரியர் ஆவார். இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி என்பவற்றின் வளர்ச்சியில் பேராசிரியர் வீ. கே. சமரநாயக்க ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. பேராசிரியர் வீ. கே. சமரநாயக்க உருவாக்கிய கொழும்பு பல்கலைக்கழக கணினிக் கல்லூரி (UCSC) இன்று இலங்கையின் பிரதான கணினிக் கற்கை நிலையமாக விளங்குகின்றது. பேராசிரியர் வீ.கே.சமரநாயக்க இறக்கும் போது இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவராண்மை நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.[1][2][3]

ஆரம்பக் கல்வியும் குடும்ப வாழ்க்கையும்

[தொகு]

V.W சமரநாயக்க தம்பதிகளின் புதல்வரான பேராசிரியர் சமரநாயக்க தனது இடைநிலைக் கல்வியினை கொழும்பு றோயல் கல்லூரியிலும் உயர் கல்வியினை இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.

வாழ்க்கை

[தொகு]

1961 ஆம் ஆண்டு முதல் பேராசிரியர் சமரநாயக்க தான் பட்டப்படிப்பினை மேற்கொண்ட கொழும்பு பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிய ஆரம்பித்தார். தொடர்ச்சியாக 43 ஆண்டுகள் பேராசிரியர் அங்கு பணிபுரிந்தார். (இக் காலகட்டத்தில் 1974 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகமாக மாற்றம் கண்டது.) 43 ஆண்டு காலப் பகுதியில் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாகவும் கணணிக் கல்லூரியின் நிறுவனராகவும் இதன் இயக்குனராகவும் பணி புரிந்தார்.

விருதுகள்

[தொகு]

இலங்கை அரசு 1997 ஆம் ஆண்டு பேராசிரியர் சமரநாயக்கவுக்கு “வித்யா பிரசாதினி” விருதையும் 1998ம் ஆண்டு “வித்யா ஜோதி” விருதினையும் வழங்கியது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு மையம் (JICA) 1996 ஆம் ஆண்டு சர்வதேச கூட்டுறவுக்கான தலைவர் விருதினை வழங்கியது. கொழும்பு பல்கலைக்கழகம் 2005 ஆம் ஆண்டு கலாநிதிப் பட்டத்தினை வழங்கியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. University of Colombo School of Computing – Funeral arrangements
  2. "Vidya Jothi Professor V.K. Samaranayake passes away". Asia Tribune. பார்க்கப்பட்ட நாள் 20 March 2015.
  3. "Board of Directors". SL2College. பார்க்கப்பட்ட நாள் 20 March 2015.