![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பின்னாதுவகே அரவிந்த டி சில்வா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 17 அக்டோபர் 1965 கொழும்பு, இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | Mad Max | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை புறத்திருப்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 93) | 23 ஆகஸ்ட் 1984 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 23 ஜூலை 2002 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 308) | 31 மார்ச் 1984 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 18 மார்ச் 2003 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 25 ஆகஸ்ட் 2007 |
தேசபந்து பின்னாதுவகே அரவிந்த டி சில்வா (Deshabandu Pinnaduwage Aravinda de Silva சிங்களம்: අරවින්ද ද සිල්වා( பிறப்பு: அக்டோபர் 17, 1965) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாளர் ஆவார் . கொழும்பில் பிறந்த இவர் டீ. எஸ். சேனானாயகே மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். இங்கிலாந்து மாகாணத் துடுப்பாட்டத்திலும் விளையாடியுள்ளார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை இலங்கைத் துடுப்பாட்ட அணி வெல்வதற்கு பிரதான பங்களிப்பை அளித்தார். இலங்கைத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பல பதவிகளில் இருந்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து 2003 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
அரவிந்த டி சில்வா கொழும்பில் உள்ள டி. எஸ். சேனானாயகே கல்லூரியிலும் , இசிபதானா கல்லூரியிலும் பயின்றார்.
இவர் இங்கிலாந்தின் கென்ட் மாகாண அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டங்களில் 1995 ஆம் ஆண்டுகளில் விளையாடினார். இவரின் துடுப்பாட்ட வாழ்க்கையில் இது திருப்புமுனையாக அமைந்தது.
1984 ஆம் ஆண்டில் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[1] இவர் துவக்க காலங்களில் அதிரடியாக ரன் குவிப்பவர் ஆனால் நிலையில்லாத ஆட்டத் திறனை வெளிப்படுத்தக் கூடியவர் என்று அறியப்பட்டார். இதனால் மேட் மேக்ஸ் என்ற புனைபெயரால் அழைக்கப்பட்டார். பின் இவரது அதிரடியாக அடிக்கும் திறன்களால் இவர் பரவலாக அறியப்படுகிறார். தனது மூர்க்கத்தனமான ஆட்டத் திறனைப் பற்றிக் கூறும்போது இது தான் எனது இயற்கையான விளையாட்டு முறை. இவ்வாறு விளையாடும் போது தான் எனக்கு நம்பிக்கை வருகிறது. எனவே எனது விளையாடும் முறையினை மாற்றம் செய்யவேண்டியதில்லை. பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அவர்கள் அதனைச் செய்யட்டும்.ஆனால் இது தான் எனது விளையாடும் முறை. என்னுடைய இளவயதில் இருந்து இந்தமாதிரி தான் விளையாடி வருகிறேன் எனத் தெரிவித்தார்.[2]
1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை இலங்கைத் துடுப்பாட்ட அணி வெல்வதற்கு பிரதான பங்களிப்பை அளித்தார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தது மட்டுமின்றி மூன்று இலக்குகளை எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். தேர்வுத் துடுப்பாட்டத்தின் இரு பகுதிகளிலும் நூறு அடித்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் இந்தச் சாதனையை இந்தியத் துடுப்பாட்ட அணியைச் சார்ந்த சுனில் காவஸ்கர், ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த ரிக்கி பாண்டிங் ஆகியோர் மூன்று முறைகள் அடித்துள்ளனர்.
பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.[3] பின் அந்தத் தொடரின் இரண்டாவது போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பாக இவர் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்தப் போட்டியின் முதல் பகுதியில் ரன்கள் எதுவும் இவர் எடுக்கவில்லை. ஆனால் இரண்டாவது பகுதியில் சந்திகா ஹதுருசிங்ஹாவுடன் இணைந்து 176 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.[4] மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று அந்தத் தொடரை 2-1 என்று வெற்றி பெற்றது. மேலும் அதே அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரையும் 2-1 என வெற்றி பெற்றது. இந்தத் தொடரின் போது 5 இலக்குகள் எடுத்து இலங்கை வீரர்களில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும் இவரின் பந்துவீச்சு சராசரி 17.80 ஆகும்.[3][5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)