அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் (1890- ஜனவரி 23 1967)[1]), காரைக்குடி அருகிலுள்ள அரியக்குடி என்ற சிற்றூரில் பிறந்த ஒரு கருநாடக இசை மேதை. அரியக்குடி என்றே இசையுலகில் அறிமுகமான இவர் தமக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொண்டார். 1918ஆம் வருடத்தில் தியாகராஜ ஆராதனையில் தம் முதல் கச்சேரியை நிகழ்த்தினார். ஒரு புகழ்பெற்ற சங்கீத பரம்பரையை உருவாக்கிய பெருமை இவரைச் சேரும்.
கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்தபோது பல புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தார். 1938 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் "ஸங்கீதத்தின் பெருமை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.[2]
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)