அல்போன்சோ தாம்ஸ்

அல்போன்சோ தாம்ஸ்

அல்போன்சோ தாம்ஸ் (Alfonso Thomas, பிறப்பு: பிப்ரவரி 9 1977), தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 120 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 143 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1998/99-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.வலதுகை மட்டையாளர் மற்றும் வலதுகை மித வேகப் பந்துவீச்சாளரான இவர் ச்டிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் , தாக்கா கிளாடியேட்டர்ஸ், டால்பின்ஸ், நார்த் வெஸ்ட், நார்தர்ன்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ், புனே வாரியர்ஸ்,சாமர்செட், சஃபோர்ட்சயர், டைடன்ஸ் மற்றும் மேற்கு மாகாணத் துடுப்பாட்ட அணி ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். சூன் 2014 இல் கவுண்டி வாகையாளர் தொடரில் சசெக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் நான்கு பந்துகளில் நான்கு இலக்குகளைக் கைப்பற்றினார்.[1] இருபது20 ஓவர் போட்டிகளில் டெத் ஓவரினை வீசியதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார்.

துடுப்பாட்ட வாழ்க்கை

[தொகு]

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

1998ஆம் ஆண்டுகளில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமனார். அப்போது கேப்டவுனில் நடைபெற்ற போட்டியில் இவர் மேற்குமாகாண ஆ அணிக்காக அறிமுகமானார். தனது முதல் மூன்று போட்டிகளில் இவர் இரண்டு இலக்குகளைக் கைப்பற்றினார்.[2] பின்பு நார்த் வெஸ்ட்டிற்கு இடம் பெயர்ந்ததால் இவர் 2000 ஆம் ஆண்டு வரை எந்த முத்ல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடவில்லை.[3] பின்பு நார்த் வெஸ்ட் மற்றும் சூப்பர் ஸ்போர்ட் தொடர்களில் இவர் விளையாடினார். குடெங் அணிக்கு எதிரான போட்டியில் இவர் 120 ஓட்ட்ஙகளை விட்டுக் கொடுத்து ஆறு இலக்குகளைக் கைப்பற்றினார். இதுவே அவரின் சிறந்த முதல்தரப் பந்துவீச்சு ஆகும். மேலும் அதற்கு இரண்டு போட்டிகளுக்குப் பிறகு தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். அந்தப் போட்டியில் பத்தாவது வீரராக களம் இறங்கிய இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 106* ஓட்டங்களை எடுத்தார். கார்த் ட்ர்ர் உடன் இணைந்து 174 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் பத்தாவது இணை எடுத்த அதிகபட்ச ஓட்டம் எனும் சாதனை படைத்தார்.[4]

தாமஸ் 2001/02 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார்.போலந்து,[5] மேற்கு மாகாணம்,[6] மற்றும் கிரிகாலாந்து மேற்கு.[7] ஆகிய அநிது அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மூன்று ஆட்டப் பகுதிகளில் இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். இவர் ஹாங் காங் சர்வதேச துடுப்பாட்ட போட்டித் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இவர் நான்கு ஓட்டங்களை விட்டுக் கொடுத்து இரண்டுஇலக்குகளைக் கைப்பற்றினார். அந்தத் தொடரில் இவர் மொத்தமாக 35 இலக்குகளைக் கைப்பற்றினார். அவரின் பந்துவீச்சு சராசரி 22.14 ஆக இருந்தது. மேலும் அந்தத் தொடரில் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய நார்த்வெஸ்ட்பந்து வீச்சாளர்களில் முதலிடம் பெற்றார். 2003 ஆம் ஆண்டுஇல் இவர் மூன்று முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.[3] ஐந்து ஒருநாள் போட்டிகளில் இவர் நார்த் வெஸ்ட் அணிக்காக விளையாடினார். பின் நார்தெர்ன்ச் அணிக்கு எதிரான போட்டியில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 119* ஓட்டங்களை எடுத்தார்.[8] 2003 ஆம் ஆண்டில் இவர் நார்தெர்ன்சுக்கு இடம்பெயர்ந்தார். பின் சூப்பர் ஸ்போர்ட் தொடர்களில் இவர் விளையாடினார். 2003 -04 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அந்தத் தொடரில் எட்டு போட்டிகளில் விளையாடி இவர் 36 இலக்குகளைக் கைப்பற்றினார்.[9] தனது முதல் போட்டியில் மூன்று இலக்குகளைக் கைப்பற்றிய இவர் மூன்று கேட்சுகளையும் பிடித்து எதிரணியினை 173 ஓட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்ய உதவினார். மேலும் அவரின் பிற்கால சக சாமர்செட் வீரரான சேர்ல் விலூபை முதல் ஆட்டப் பகுதியில் 56 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஏழு இலக்குகளைக்யும் இரண்டாவது ஆட்டப் பகுதியிம் 56 ஓட்டங்க:ளை விட்டுக் கொடுத்து நான்கு இலக்குகளையும் கைப்பற்றினார். மேலும் ஆட்ட்நாயகன் விருதினையும் பெற்றார்.[10]

சான்றுகள்

[தொகு]
  1. "Alfonso Thomas: Somerset seamer takes four wickets in four balls". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 10 June 2014.
  2. "First-class Bowling For Each Team by Alfonso Thomas". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2009-10-11.
  3. 3.0 3.1 "First-Class Matches played by Alfonso Thomas". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2009-10-11.
  4. "Highest Partnership for Each Wicket for North West". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2009-10-11.
  5. "Scorecard: North West v Boland in 2001/02". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18.
  6. "Scorecard: North West v Western Province in 2001/02". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18.
  7. "Scorecard: Griqualand West v North West in 2001/02". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18.
  8. "Scorecard: Northerns v North West in 2002/03". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  9. "Bowling for Northerns in SuperSport Series 2003/04". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  10. "Scorecard: Northerns v Western Province in 2003/04". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.

வெளி இணைப்பு

[தொகு]

அல்போன்சோ தாம்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 19 2011.