Russell in 2018 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஆன்ட்ரே டுவைன் ரசல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 29 ஏப்ரல் 1988 கிங்ஸ்டன், ஜமேக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 1 அங் (1.85 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை விரைவு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே தேர்வு | 15 நவம்பர் 2010 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 156) | 11 மார்ச் 2011 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 17 சூன் 2019 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 46) | 21 ஏப்ரல் 2011 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 6 மார்ச் 2020 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007–தற்போதுவரை | யமேக்கா தேசிய அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012 | குல்னா டைகர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012–2013 | டெல்லி டேர்டெவில்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013 | வொர்செஸ்டர்ஷைர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013–தற்போதுவரை | ஜமைக்கா தல்லாவாஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014–தற்போதுவரை | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014–2015 | நைட்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014/15 | மெல்போர்ன் ரெனிகேட்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015 | கோமிலா விக்டோரியன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015/16–2016/17 | சிட்னி தண்டர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016, 2018 | இசுலாமாபாத் யுனைடெட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016 | நாட்டிங்ஹாம்ஷைர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016, 2019 | டாக்கா டைனமைட்டுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2020-தற்போதுவரை | கொழும்பு கிங்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 6 மாாச் 2020 |
ஆன்ட்ரே டுவைன் ரசல் (Andre Dwayne Russell [1], பிறப்பு: ஏப்ரல் 29 1988)[1] யமேக்கா நாட்டுத் துடுப்பாட்ட வீரர். இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை விரைவுப் பந்துவீச்சாளரும் ஆவார்.[1] களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவரின் அதிரடித் துடுப்பாட்டங்களினால் இவர் பரவலாக அறியப்படுகிறார். கரீபியன் பிரீமியர் லீக்கில் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 42 பந்துகளில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இதில் 11 ஆறுகள் மற்றும் 3 நான்குகள் அடங்கும்.
நவம்பர் 2010 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப்போட்டியில் அ/ரிமுகமானார்.[2][3]
2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டித் தொடரில் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானர். இந்தப் போட்டியில் ஜான் மூனி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். 10 ஓவர்கள் வீசிய இவர் 37 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்குகளை வீழ்த்தினார். இதில் 2 ஓவர்களை மெய்டனாக வீசினார். இந்தப் போட்டியில் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின் சென்னையில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இந்தத் தொடரில் 46 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தினார்.
பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாகச் செயல்படத் தவறினார். எனவே இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே மூன்றாவது போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். நார்த் சவுண்ட் , சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 96 ஓட்டங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 இலக்குகளை இழந்திருந்தது. அந்தசமயத்தில் களமிறங்கிய இவர் கார்ல்டன் பாஹ் உடன் இணைந்து 78 ஓட்டங்கள் எடுத்தார். பின் கீமர்ரோச்சுடன் இணைந்து 51 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் 64 பந்துகளை எதிர்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அந்த அணி 225 ஓட்டங்களைப் பெற உதவினார். பின் பந்துவீச்சில் ஹர்பஜன் சிங் இலக்கினை வீழ்த்தினார். மேலும் சுப்பிரமணியம் பத்ரிநாத்தை ரன் அவுட் ஆக்கினார். பின் பார்தீவ் பட்டேல் அடித்த பந்தை கேட்ச் பிடித்தார். இவர் சிறப்பாகச் செயல்பட்ட போதிலும் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. பின் இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 14 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இவர் சுப்பிரமணியம் பத்ரிநாத், ரவிச்சந்திரன் அசுவின், மற்றும் பிரவீன் குமார் ஆகியோரின் இலக்கினை வீழ்த்தினார். 7 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்கள் கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்தினார்.
2012 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடருக்காக இவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 450,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.[4]
வ என் | எதிரணி | இடம் | நாள் | செயல்பாடு | முடிவு |
---|---|---|---|---|---|
1 | இந்தியா | சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் | 11 சூன் 2011 | 92* (64 பந்துகள், 8x4, 5x6) ; 9–0–59–1 ; 1 ct. | இந்தியா 3 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.[5] |
2 | இந்தியா | சபினா பார்க், கிங்க்ஸ்டன் | 16 சூன் 2011 | 8.3–0–35–4 ; DNB | மேற்கிந்தியத் தீவுகள் 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.[6] |
3 | நியூசிலாந்து | சபினா பார்க், கிங்க்ஸ்டன் | 5 சூலை 2012 | 10–0–45–4 ; DNB | மேற்கிந்தியத் தீவுகள் 9 இலக்குகள்வித்தியாசத்தில் வெற்றி (D/L).[7] |
4 | தென்னாப்பிரிக்கா | ஓவல் | 25 சனவரி 2015 | 10–1–60–1 ; 64* (40 பந்துகள், 5x4, 5x6) | மேற்கிந்தியத் தீவுகள் இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.[8] |
5 | பாக்கித்தான் | கிறிஸ்ட் சர்ச் | 21 பெப்ரவரி 2015 | 42* (13 பந்துகள், 3x4, 4x6) ; 8–2–33–3 ; 1 ct. | மேற்கிந்தியத் தீவுகள் 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி.[9] |