![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஆப்ரே ஃபாக்னர் | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 58) | சனவரி 2 1906 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சூன் 28 1924 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், நவம்பர் 6 2009 |
ஆப்ரே ஃபாக்னர் (Aubrey Faulkner, பிறப்பு: திசம்பர் 17 1881, இறப்பு: செப்டம்பர் 10 1930), தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 118 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1906 -1924 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். வலது கை மட்டையாளர் மற்றும் இடதுகை கூக்ளி பந்து வீசும் இவர் தென்னாப்பிரிக்க அணி , மரிலபோர்ன் துடுப்பாட்ட சங்கம் மற்றும் டிரன்ஸ்வால் ஆகிய அணிகளில் விளையாடி உள்ளார்.
1906 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .சனவரி 2இல் ஜோகன்சுபர்க்கில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 22 ஓவர்கள் வீசி 35 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.இதில் இரண்டு இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 7 ஓவர்களை மெய்டனாக வீசினார். மட்டையாட்டத்தில் நான்கு ஓட்டங்களை எடுத்து இவர் பிலித்தீ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 12 ஓவர்கள் வீசி 26 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.இதில் நான்கு இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 5 ஓவர்களை மெய்டனாக வீசினார். மட்டையாட்டத்தில் ஆறு ஓட்டங்களை எடுத்து இவர் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு இலக்குகளால் வெற்றி பெற்றது.[1] 1907 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . எடிங்லே மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு போட்டியில் இவர் முக்கியப் பந்துவீச்சாளராக அறியப்படடர். அந்தப் போட்டியில் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி ஒரு இலக்கினை மட்டுமே இழந்திருந்தது. அதன் பிறகு மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இவர் பந்து வீசத் துவங்கினார். 17 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இவர் ஆறு இலக்குகளைக் கைப்பற்றினார்.[2][3][4] இந்தத் துடுப்பாட்டத் தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 228 முதல்தரத் துடுப்பாட்ட இலக்குகளைக் கைப்பற்றினர். இவரின் பந்துவீச்சினைக் கண்டறிவதில் சிக்கல் இருபதாக இங்கிலாந்து அணியினர் குற்றம் சாட்டினர்.[3] இந்தத் தொடரில் இவர் மட்டும் 73 இலக்குகளைக் கைப்பற்றினார். மேலும் 1,288 ஓட்டங்களையும் எடுத்தார்.[2] அதற்கு அடுத்து இரண்டு ஆண்டுகள் இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடவில்லை.[3] பின் 1909 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்வுப் போட்டிகளில் விளையாடியது. அந்தத் தொடரில் இவர் தேர்வானார். அந்தப் போட்டித் தொடரில் இவர் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். மேலும் விசுடன் சிறந்த விளையாட்டு வீரர் உட்பட சகலத் துறையர்களில் ஒருவராகவும் அறியப்படார். முதல் போட்டியில் 78 ஓட்டங்கள் எடுத்து அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். மேலும் 33 ஓவர்களை வீசி ஐந்து இலக்குகளையும் கைப்பற்றினார்.[3][5]
1924 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .சூன் 8 இல் இலார்ட்சு மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்.. இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 17 ஓவர்கள் வீசி 84 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. மட்டையாட்டத்தில் 25 ஓட்டங்களை எடுத்து இவர் பெண்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் மட்டையாட்டத்தில் 12 ஓட்டங்கள் எடுத்து இவர் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு ஆட்டப் பகுதி மற்றும் 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[6]