இரண்டாம் சரபோஜி | |||||
---|---|---|---|---|---|
சோழமண்டல மன்னன், தஞ்சாவூர் அரசர் | |||||
ஆட்சி | 1787 (Date unknown) – 1793, 29 சூன் 1798 – 7 மார்ச்சு 1832 | ||||
முடிசூட்டு விழா | 1787 (Date unknown), 29 சூன் 1798 | ||||
முன்னிருந்தவர் | துல்சாசி, அமர்சிங் | ||||
எதிர்பார்க்கப்பட்ட வாரிசு | அமர்சிங், தஞ்சையின் சிவாசி II | ||||
அரசி | முக்தாம்பாள் | ||||
| |||||
மரபு | போன்சலே | ||||
அரச குலம் | தஞ்சை மராத்தியப் பரம்பரை | ||||
பிறப்பு | தஞ்சாவூர் | 24 செப்டம்பர் 1777||||
இறப்பு | 7 மார்ச்சு 1832 தஞ்சாவூர் | (அகவை 54)||||
அடக்கம் | தஞ்சாவூர் |
இரண்டாம் சரபோஜி (மராத்தி: सर्फोजी) (செப்டம்பர் 24, 1777 - மார்ச் 7, 1832), அல்லது சரபோஜி மாமன்னர், மராத்திய போன்சலே வம்சத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவராவார். இவர் இராச்சியத்தின் கடைசி சுதந்திர மன்னன் ஆவார். இவர் தஞ்சையின் பிரபலமான சரசுவதி மகால் நூலகத்தை அமைத்தார்.இரண்டாம் சரபோஜி அனைத்து தரப்பட்ட மக்களையும் தன் நண்பர்களாக கொண்டிருந்தார் எடுத்துக்காட்டாக ஒரு முறை தன் நாட்டில் பயணம் மேற்க்கொள்ளும் போது பெரும் மதிப்பு கொண்ட நாணயத்திற்க்கு சில்லரை யாரிடம் கிடைக்குமென விசாரித்ததில் காடுவெட்டிவிடுதி என்ற ஊரில் சு. சா. சுப்பஞ் செட்டியார் முன்னோரான முருகன் செட்டியாரிடம் இருக்குமென அறிந்து செட்டியாரின் இல்லத்தில் நேரடியாக விஜயம் செய்து நட்புக்கொண்டார் பின் செட்டியார் அரண்மனை வரும் போது பல்லாக்கில் வர வேண்டுமென பல்லாக்கையும் அதை தூக்க ஆண்களையும் நியமித்து வந்தார்.
கிளாடியசு புக்கானன்(Dr.Claudius Buchanan), ஆயர் மிடில்ட்டன் (Bishop Middleton), ஆயர் இபர் (Bishop Heber), வாலன்சியா (Lord Valentia) முதலிய வெளிநாட்டவர்கள் தம் குறிப்புகளில் இவரைப் புகழ்ந்துள்ளனர்.
மராத்திய அரசர் துல்சாசி வாரிசின்றி இருந்ததால், அவர் இறக்கும் முன் அவருடைய தத்து எடுத்த மகனான சரபோசி பட்டம் பெறவும், அம்மகனுகுக் காப்பாளராக அமரசிங்கும், சுவார்ட்சு பாதிரியார் (Rev.Schwartz) ஆசிரியராகக் கல்வி கற்பித்து வளர்க்கவும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அமரசிங் தனக்கே பட்டம் கிடைக்க வேண்டுமென்று சூழ்ச்சி செய்தார். அதனை ஏற்ற ஆங்கில அரசாங்கம் அமரசிங்கையே அரசராக்கியது. ஆட்சிக்கு வந்த அமரசிங்கோ, ஆட்சி செலுத்தாமல், சரபோசியையும், அரசகுடும்பத் தேவிமார்களையும் பல பொய்க் குற்றங்களுக்கு ஆளாக்கித் துன்புறுத்தினார். அவர்களைக் கொல்லவும் சதி செய்தார். இதிலிருந்து சரபோசி, அப்பாதிரியாரின் உதவியுடன் தப்பி, அப்பாதிரியாராலேயே அரசுரிமையைப் பெற்றார். 1798 இல் பட்டம் பெற்றதும், தமக்கு இருந்த அதிகாரமின்மையை அறிந்து கொண்டார். பதவியும், கௌரவமும், ஆங்கில அரசாங்கம் அளிக்கும் ஓய்வூதியமும் கிடைத்தால் போதும் என்ற நிலையில் வாழ்ந்தார்.