இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி | |
---|---|
கச்சேரி ஒன்றில் முருகபூபதி | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | பெப்ரவரி 14, 1914 |
இறப்பு | மார்ச்சு 21, 1998 | (அகவை 84)
இசை வடிவங்கள் | இந்திய பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | மிருதங்கம் வாசிப்பு |
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள் | |
மிருதங்கம் |
இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி என்பவர் (பெப்ரவரி 14, 1914 - மார்ச் 21, 1998) தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். சிறந்த மிருதங்கக் கலைஞர்களாக விளங்கிய பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், பழனி சுப்பிரமணிய பிள்ளை ஆகியோரின் சம காலத்தவர் முருகபூபதி ஆவார்.[1] இம்மூவரும் ‘மிருதங்க மும்மூர்த்திகள்’ என இசை விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறார்கள்.[1] இவர், மதுரை மாரியப்ப சுவாமிகளின் இசை நிகழ்ச்சிகளில் மிருதங்கம் வாசித்துள்ளார்.
தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தில் பிறந்த இவர், தனது தந்தை சித்சபை சேர்வையிடம் ஆரம்பகால இசைப் பயிற்சியினை ஆரம்பித்தார். தொடர்ந்து பழனி முத்தையா பிள்ளையிடம் இசையினைக் கற்றார். முருகபூபதியின் மூத்த தமையன் சி. எஸ். சங்கரசிவம் பாகவதர் என்பவர், முருகபூபதி தனக்கென ஒரு பாணியினை வளர்த்துக் கொள்ள பெரிதும் துணை புரிந்தார். இடது கையினால் மிருதங்கத்தில் செய்யப்படும் வாசிப்பு நுணுக்கங்களை, அக்காலத்து தலைசிறந்த மிருதங்கக் கலைஞர்களில் ஒருவரான கும்பகோணம் அழகநம்பி பிள்ளையிடமிருந்து முருகபூபதி கற்றார்.
இவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்:
இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:[1]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); External link in |publisher=
(help)