இலங்கை வங்கி

இலங்கை வங்கி
வகைபொது
நிறுவுகை1939 [1]
தொழில்துறைநிதி
உற்பத்திகள்வங்கி மற்றும் நிதியியல் தொடர்பான சேவைகள்
இணையத்தளம்web.boc.lk

இலங்கை வங்கி (Bank of Ceylon) இலங்கையின் மிகப் பெரிய அரசுடமை வங்கி. இதன் தலைமைக் காரியாலயம் இலங்கையின் வர்த்தக மற்றும் அரசியல் தலைநகரமான கொழும்பில் அமைந்துள்ளது. இது 303 உள்நாட்டுக் கிளைகளையும் 3 வெளிநாட்டுக் கிளைகளையும் தன்னகத்தே கொண்டு தனது சேவையினை விரிவாக்கி உள்ளது. இவ்வங்கியானது பல்வேறுபட்ட சில்லறை, மொத்த, சர்வதேச, முதலீட்டு வங்கியியல், பல்வேறுபட்ட சேவைகள், கடனட்டை வசதி, வரவட்டை வசதி, நகை அடகு சேவை போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகிறது.

வரலாறு

[தொகு]
  • 1939: இலங்கை வங்கியினை சேர். அன்ரியு கல்டிகொட் அவர்கள் ஆரம்பித்ததுடன் அவரே முதலாவது தலைவருமாவார். அக்காலப்பகுதியின் பிரித்தானிய ஆளுநரான அன்றுவ் கல்டிகொட் அவர்கள் வைபவபூர்வமாக ஆடி மாதம் முதலாம் திகதி 1939 அன்று ஆரம்பித்து வைத்தார்.
  • 1941: இதன் முதலாவது கிளையை கண்டியிலும் அதனைத் தொடர்ந்து காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோணமலை, பதுளை மற்றும் பாணந்துறையிலும் நிறுவியது.
  • 1949: இலங்கை வங்கி தனது முதலாவது கடல் கடந்த வங்கியை ஐக்கிய இராச்சியத்தில் இங்கிலாந்தில் தொடங்கியது.
  • 1961: இலங்கை அரசாங்கத்தினால் இலங்கை வங்கி தேசிய மயமாக்கப்பட்டது.
  • 1972: விவசாய உற்பத்தியாக்கள் சட்டமானது நாடு பூராகவும் பயிர்த்தொழில் சேவை நிலையங்களை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்தது. இதன் விளைவாக நாட்டின் கிராம புறங்களுக்கும் இலங்கை வங்கியின் கிளைகள் விரிவாக்கப்பட்டன.
  • 1979: சுதந்திரமான பரிமாற்று கட்டுபாட்டு விதிகள் அதனுடைய வெளிநாட்டு நாணய அலகு நிலையத்தை திறப்பதற்கு வழிவகுத்தது.
  • 1981: மாலைதீவில் கிளை திறக்கப்பட்டது
  • 1982: இது இலங்கையின் முதலாவது வியாபார வங்கியாகத் தெரிவு செய்யப்பட்டது.
  • 1989: இலங்கையில் முதன் முறையாக வீசா அட்டையினை அறிமுகப்படுத்தியது.
  • 1995: இலங்கை வங்கி தனது கடல் கடந்த வங்கி கிளையினை பாக்கிஸ்தானில் கராச்சியில் நிறுவியது.
  • 1995: தனது கடல் கடந்த வங்கிக் கிளையினை இந்தியாவில் சென்னையில் நிறுவியது.

இலங்கை வங்கியால் பேணப்படும் வைப்புக்களின் வகைகள்

[தொகு]

ஏனைய தொழிற்பாடுகள்

[தொகு]
  • நிலையான வைப்புகளை பேணல்.
  • நகை அடகுபிடித்தல்.
  • நாணயமாற்றம் செய்தல்.
  • சர்வதேச கொடுக்கல் வாங்கல்களைப் பேணல்.
  • ATM அட்டை, கடனட்டை(Credit card) வழங்கல்.

இலங்கையின் சில வணிக வங்கிகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]