இலங்கையில் தேயிலை உற்பத்தி வெளிநாட்டு வருவாயைப் பெற்றுத்தரும் பிரதான வளமாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ஆக இருந்து, 2013 இல் 1,527 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொடுத்தது.[1]
இலங்கையில் கறுப்புத் தேயிலையின் உற்பத்தி திவில் காணப்பட்ட கோப்பி பெருந்தோட்டங்கள் ஏமியா வஸ்டரிக்ஸ் (Hemileia vastatrix) என்ற நுண்மத்தாக்குதலுக்கு உள்ளாகி அழிவுற்றதன் பின்னர் தொடங்கியது. கோப்பி பெருந்தோட்ட அதிகாரிகள் வேறு ஒரு பயிருக்கான தேவையை உணரத்தொடங்கினர். லூல்கந்துரை பெருந்தோட்டம் தேயிலை வளர்ப்பிற்கான ஆர்வத்தைக் கொண்டிருந்தது. பெருந்தோட்டத்துக்கு வந்திருந்த ஜேம்ஸ் டெய்ளர் 1867 தேயிலைப் பயிரிட்டார். மொத்தம் 19 ஏக்கர் நிலத்தில் தேயிலை பெயிரிடப்பட்டது. வட இந்தியாவில் தேயிலை வளர்ப்பு, தேயிலை உற்பத்தி போன்றவற்றில் அனுபவம் பெற்றிருந்த டெய்ளர், தனது வீட்டின் முன்னரையில் உற்பத்தி தொடர்பான பல சோதனைகளைச் செய்தார். தேயிலை இலையைக் தனது கைகளால் சுருட்டி, வாடிய அத்தேயிலைகளை களிமண் அடுப்பில் கரியைப் பயன்படுத்தி சுட்டார். இவ்வாறு தயாரிக்கப்பட்ட தேயிலை இலண்டன் நகரின் ஏலத்தில் கூடிய விலையைப்பெற்றது. இது இலங்கையில் தேயிலை உற்பத்தியை ஊக்கமூட்டியது. 1890 இல் இலங்கை 22,900 தொன் தேயிலையை உற்பத்தி செய்தது இது 1873–1880 வரை உற்பத்தி செய்யப்பட்ட 12 கிலோவுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய வளர்ச்சியாகும்.
1971 வரை பெரும்பாலான தேயிலைப் பெருந்தோட்டங்கள் பிரித்தானியர் வசமே காணப்பட்டது, இவை நில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி அரசவசப்படுத்தப்பட்டது. 1990 ஆண்டு முதல் தேயிலைப் பெருந்தோட்டங்களின் நிர்வாகம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முக்கிய தேயிலை வளப்புப் பகுதிகள் ஆறு காணப்படுகின்றன:
இலங்கை கறுப்புத் தேயிலை இலங்கையில் வளர்க்கப்படும் கறுப்புத் தேயிலையாகும். இது நல்ல நறுமணத்தைக் கொண்டிருப்பதோடு சிற்றஸ் அமிலத்தின் மணத்துக்கு ஒப்பானதாகும். தேயிலை சுவையூட்டிகள் கலந்தோ அல்லது கலக்கப்படாமலோ அருந்தப்படுகிறது. தேயிலை பல பெருந்தோட்டங்களில் பல உயரங்களில் வளர்க்கப்படுகிறது, உயரத்துக்கமைய சுவையும் வேறுபடுகிறது.
![]() | This article's use of external links may not follow Wikipedia's policies or guidelines. (நவம்பர் 2013) |