கடன் வாங்கி கல்யாணம் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | எல். வி. பிரசாத் |
தயாரிப்பு | பி. நாகிரெட்டி விஜயா புரொடக்சன்ஸ் சக்கரபாணி |
கதை | சக்கரபாணி எல். வி. பிரசாத் வேம்படீ சதாசிவபிரம்மம் |
இசை | எஸ். ராஜேஸ்வர ராவ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் கே. சாரங்கபாணி கே. ஏ. தங்கவேலு எஸ். வி. ரங்கராவ் டி. எஸ். பாலையா சாவித்திரி ஈ. வி. சரோஜா டி. பி. முத்துலட்சுமி ஜமுனா |
வெளியீடு | செப்டம்பர் 17, 1958 |
ஓட்டம் | . |
நீளம் | 1661 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கடன் வாங்கி கல்யாணம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. கணேஷ் , சாவித்திரி, ஜமுனா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவானது. தெலுங்கு பதிப்பில் சாவித்திரி, ஜமுனா ஆகியோரை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற நடிகர்களை மாற்றிவிட்டு அப்பு சேசி பப்பு கூடு என்ற பெயரிலான படத்தில் என். டி. ராமராவை நாயகனாக கொண்டு படமாக்கினர்ழ இதன் தெலுங்கு பதிப்பு இப்படம் வெளியான அடுத்த ஆண்டு வெளியானது.[2]
|
|
இப்படத்திற்கு எஸ். ராஜேஸ்வர ராவ் இசையமைத்தார். பாடல் வரிகளை தஞ்சை இராமையாதாஸ் எழுதினார்.[4]
பாடல் | பாடகர் | நீளம் |
---|---|---|
"கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே" | ஏ. எம். ராஜா, பி. லீலா | 02:39 |
"கடன் வாங்கி கல்யாண சாதம்" | சீர்காழி கோவிந்தராஜன் | 02:47 |
"எங்கிருந்து வீசுதோ" | ஏ. எம். ராஜா, பி. லீலா | 02:27 |
"காசிக்கு போனேன் ராமாரி" | எஸ். சி. கிருஷ்ணன், ஏ. ஜி. ரத்னமாலா | 03:16 |
"ராம ராம சரணம் பட்டாபி ராம சரணம்" | பி. லீலா | 02:14 |
"சுந்தராங்கியைப் பார்த்ததினாலே சில பேர்" | பி. லீலா, சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எம். ராஜா | 03:44 |
"போதும் உந்தன் ஜாலமே" | ஏ. எம். ராஜா | 02:50 |
"மது வேண்டும்.... கால்லமிலாத காலத்திலே" | பி. லீலா, பி. சுசீலா | 03:18 |
"நீரில்லா கிணற்றிலே வேரில்லா வாழையுண்டு" | ஏ. எம். ராஜா | 02:00 |
"அக்கா மகளே....தூத்துக்குடி சாத்துக்குடி" | எஸ். சி. கிருஷ்ணன், ஏ. ஜி. ரத்னமாலா | 02:50 |
"ஆனந்தம் பரமானந்தம்" | ஏ. எம். ராஜா, பி. லீலா | 02:30 |
"தென்னாடு முதல் ஏன்னாடு வரை" | சீர்காழி கோவிந்தராஜன் | 01:01 |
"தன் மனதை நலனுக்கு" | பி. லீலா, சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எம். ராஜா | 06:26 |
"தாராவின் பார்வையிலே ஓ வெண்ணிலாவே" | ஏ. எம். ராஜா | 02:14 |
அழாமல் சிரிக்க வேண்டும் என்றால் பார்க்க வேண்டிய படம் என்று கல்கியின் கந்தன் குறிப்பிட்டார்.[5]