தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கிரைக் கிளைர்மொட் பிராத்வெயிட்[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 1 திசம்பர் 1992 பிளாக் ரொக், சென் மைக்கல், பார்படோசு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | போபோ/கிரைகி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கைத் துடுப்பாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கைப் புறத்திருப்பம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | முதலில் துடுப்பாடுபவர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 290) | 20 மே 2011 எ. பாக்கித்தான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 22–26 அக்டோபர் 2015 எ. இலங்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008-இன்று | வான்டரசு துடுப்பாட்டக் கழகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008-இன்று | பார்படோசு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, அக்டோபர் 24 2015 |
கிரைக் கிளயர்மோன்டே பிராத்வெயிட் ('Kraigg Clairmonte Brathwaite,[1] பிறப்பு: 2 டிசம்பர் 1992) மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் பார்படோசு அணிகளின் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் வலக்கைத் துடுப்பாட்டக்காரர் ஆவார்.அவ்வப்போது புறத்திருப்ப பந்து வீச்சாளராகவும் செயல்படுகிறார்.நவம்பர் 6,2011 இல் புது தில்லியில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 212 பந்துகளில் 63 ஓட்டங்களெடுத்தார். இது இவரின் இரண்டாவது அரைநூறாகும். இதன் மூலம் இரண்டு அரைநூறுகள் அடித்த 19 வயதிற்குட்பட்ட மேற்கிந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[2]
பிராத்வெயிட் உள்ளூர் ஆட்டங்களில் 28 தடவைகள் நூறு ஓட்டங்களைப் பெற்றதன் பின்னர், 15-வயதிற்குட்பட்டோருக்கான மேற்கிந்திய அணியில் சேர்க்கப்பட்டார். 2008 15-வயதிற்குட்பட்டோருக்கான சர்வதேச கோப்பைக்கான தொடரில் கலந்து கொண்டார். 2009 சூனில் வங்காளதேச அணிக்கு எதிரான தேர்வுப் போட்டிகளில் விளையாடத் தேர்தெடுக்கப்பட்டார்.[3]
சூன், 2009 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் போது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட இவரை மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி நிர்வாகம் அழைத்தது.ஏனெனில் அந்தத் தொடருக்கு தேர்வான சில வீரர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[3]
நவம்பர் ,2013 இல் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் போட்டியில் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஏனெனில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இரண்டாவது ஓட்டங்கள் எடுப்பதற்கு ஓடும்போது கிறிஸ் கெயிலுக்கு காயம் ஏற்பட்டதனால் இந்தத் தொடரில் விளையாட இயலவில்லை. எனவே இவருக்குப் பதிலாக கிரைக்கிற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர் பார்படோசுவில் உள்ள சகிகோர் ஹை பெர்பார்மன்ஸ் சென்டரின் உறுப்பினர் ஆவார். இதனால் இவருக்கு நியூசிலாந்து செல்வதற்கான நுழைவிசைவு கிடைப்பதில் சிக்கல் இருந்தது. சுமார் இரண்டு வார தாமதத்திற்குப்பிறகு இவர் நியூசிலாந்து சென்று விளையாடினார். இவர் விளையாடிய முதல் போட்டியில் 45 ஓட்டங்களும் இரண்டாவது போட்டியில் 7 ஓட்டங்களும் எடுத்தார்.
2015 ஆம் ஆண்டில் கொழும்பில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 29 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார். இதுவே இவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும். பின் டிசம்பர், 2015 ஆம் ஆண்டில் பிரான்க் ஓரல் கோப்பைக்கான ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 94 ஓட்டங்கள் எடுத்து இறுதியாக ஆட்டமிழந்தார். மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த ஓட்டங்கள் 148 ஆகும். இதில் இவரின் பங்களிப்பு 63.51 சவீதம் ஆகும். இதன்மூலம் அணியில் ஒரு தனிவீரரின் பங்களிப்பில் இது நான்காவது அதிகபட்சம் ஆகும்.
செப்டம்பர் 30, 2016 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[4]
நவம்பர் 1, 2016 இல் ஷார்ஜா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் பகுதியில் 5 ஆவது வீரராக களம் இறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 142* ஓட்டங்கள் எடுத்தார் [5] . பின் இரண்டாவது ஆட்டப்பகுதியிலும் துவக்க வீரராக களம் இறங்கி இறுதிவரை ஆட்டமிழக்கமல் இருந்தார். இதன்மூலம் இரண்டு ஆட்டப் பகுதியிலும் ஆட்டமிழக்காமல் இருந்த துவக்கவீரர் எனும் சாதனை படைத்தார்.[6][7][8].
# | ஓட்டங்கள் | ஆட்டம் | எதிராக | நாடு | அரங்கு | ஆண்டு | முடிவு |
---|---|---|---|---|---|---|---|
1 | 129 | 11 | ![]() |
![]() |
குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் | 2014 | வெற்றி |
2 | 212 | 13 | ![]() |
![]() |
ஆர்னோசு வேல் அரங்கு | 2014 | வெற்றி |
3 | 106 | 16 | ![]() |
![]() |
சென் ஜோர்ஜசு ஓவல் | 2014 | சமம் |
4 | 116 | 19 | ![]() |
![]() |
தேசிய துடுப்பாட்ட அரங்கு | 2015 | தோல்வி |