2018இல் டி கிரான்ஹோம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கொலின் டி கிரான்ஹோம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 22 சூலை 1986 ஹராரே, சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை மிதவேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக துடுப்பாட்டக்காரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | லாரன்ஸ் டி கிரான்ட்ஹோம் (தந்தை) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 270) | 17 நவம்பர் 2016 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 21 நவம்பர் 2019 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 173) | 3 பிப்ரவரி 2012 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 14 July 2019 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 52) | 11 பிப்ரவரி 2012 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 10 நவம்பர் 2019 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 25 நவம்பர் 2019 |
கொலின் டி கிரான்ஹோம் (Colin de Grandhomme, பிறப்பு: 22 ஜூலை 22 1986) என்பவர் சிம்பாப்வேயில் பிறந்த நியூசிலாந்து துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்காக அனைத்து வகையான பன்னாட்டுப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். பன்முகத் துடுப்பாட்டக்காரரான இவர் வலதுகை மட்டையாளரும் வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளரும் ஆவார்.
டி கிராண்ஹோம் சிம்பாப்வேயில் மணிக்கலாந்து துடுப்பாட்ட அணிக்காக தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் 2006 முதல் மாநில வாகையாளர் துடுப்பாட்டத் தொடருக்காக இவர் ஆக்லாந்து ஏசஸ் அணிக்காக விளையாடியுள்ளார். டி கிராண்ட்ஹோம் 2004 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடந்த 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடினார். 2017 ஆம் ஆண்டில், டி கிராண்ட்ஹோம் வார்விக்ஷயரில் சேர்ந்தார். தி ஓவலில் சர்ரே கவுண்டி மாகாண துடுப்பாட்ட அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் நாட்வெஸ்ட் டி 20 பிளாஸ்ட் அணிக்காக 38 ரன்கள் இறுதிவரை ஆட்டமிழக்காமல் தனது அணியின் வெற்றிக்கு உதவினார்.
மே 2018 இல், இவர் 2007 முதல் ஆக்லாந்துக்காக விளையாடிய பின்னர், 2018–19 பருவத்திற்கு முன்னதாக வடக்கு மாவட்டங்களுக்காக விளையாடுவதற்காக கையெழுத்திட்டார்.[1]
டி கிராண்ஹோம் 11 பிப்ரவரி 2012 அன்று ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு பன்னாட்டு இருபது அளவில் அறிமுகமானார். 2012 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். மார்ச் 3 இல் நடைபெற்ற போட்டியில் இவர் 36 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்து ஆல்பி மோர்கலால் ரன் அவுட் ஆனார்.
2016 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளலுயாடியது. நவம்பரில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[2] அசார்அலியை தனது முதல் தேர்வுத் துடுப்பாட்ட இலக்காக கைப்பற்றினார். இந்த போட்டியில், கிராண்ட்ஹோம் ஒரு அரைசதம் அடித்தார் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் தனது முதல் ஆட்டப் பகுதியில் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார்.[3] இவர் தனது முதல்தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றிய நான்காவது நியூசிலாந்து வீரர் ஆனார்.[4][5]
2 டிசம்பர் 2017 அன்று , மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, டி கிராண்ட்ஹோம் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்ட நூரு ஓட்டங்களை எடுத்தார். 71 பந்துகளில் இவர் நூறு ஓட்டங்களை எடுத்தார்.இதன்மூலம் விரைவாக நூறு ஓட்ட்டங்களை எடுத்த இரண்டாவது நியூசிலாந்து வீரர் எனும் சாதனை படைத்தார்.[6] மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாட இவர் தேர்வானார். ஆனால் இவரின் தந்தை இறந்ததால் இவர் தொடர் துவங்கப்படுவதற்கு முன்னதகவே அதில் இருந்து வெளியேறினார்.[7]
மே 2018 இல், நியூசிலாந்து கிரிக்கெட்டால் 2018–19 சீசனுக்கான புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்ட இருபது வீரர்களில் இவரும் ஒருவர்.[8] ஏப்ரல் 2019 இல், அவர் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்தின் அணியில் இடம் பெற்றார்.[9][10]
கொலின் டி கிரான்ஹோம்- கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 20 2011.