சீனாவில் நிலக்கரி (Coal in China) , நிலக்கரி உற்பத்தி மற்றும்நிலக்கரி நுகர்வு போன்றவற்றில் உலகத்திலேயே சீனா முதலிடம் பெற்றுள்ளது. மேலும் நிலக்கரி மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் பயனாளர்களைக் கொண்ட நாடுகளிலும் சீனா முதலிடத்தில் இருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டுகளில் இருந்து குறையத் தொடங்கியது 2015 ஆம் ஆண்டில் இது 64 விழுக்காடு, 2016 ஆம் ஆண்டில் 62 விழுக்காடு, எனக் குறையத் தொடங்கியதாகத் சீனாவின் தேசியப் புள்ளியியல் தகவலகம் தெரிவித்துள்ளது.[1] உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியானது 2016 ஆம் ஆண்டில் மேலும் 9 விழுக்காடு குறைந்தது.
2014 ஆம் ஆண்டின் முடிவில், சீனா 62 பில்லியன் டன் கருப்பு நிலக்கரி மற்றும் 52 பில்லியன் டன் பழுப்பு நிலக்கரி இருந்தது. மொத்த நிலக்கரி இருப்புக்களின் அடிப்படையில் அமெரிக்கா, ருஷ்யா, ஆகிய நாட்டிற்கு அடுத்தப்படியாக சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது.[2] சீனாவின் நிலாகரி இருப்பானது பெரும்பாலும், வடக்கு மற்றும் வட- கிழக்குப் பகுதிகளில் இருந்தது. இதனால் சீனாவின் கடலோரப் பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்வதில் பல சிரமங்களையும் மின்சார இழப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.[3] தற்போதைய நிலவரப்படி சீனாவின் நிலக்கரி இருப்பானது 30 ஆண்டுகளுக்குப் போதுமனதாக இருக்கும். [4]
நிலக்கரி உற்பத்தியில் உலகத்திலேயே சீனா முதலிடம் பெற்றுள்ளது.[5] மேலும் 2015 ஆம் ஆண்டுகளில் நிலக்கரியின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக வடகிழக்கு சுரங்களில் பணிகள் நிறுத்தப்பட்டன.[6]
ஆண்டு | நிலக்கரி உற்பத்தி (பில்லியனில்) |
---|---|
2000 | 1.00 |
2001 | 1.11 |
2002 | 1.42 |
2003 | 1.61 |
2004 | 2.00 |
2005 | 2.19 |
2006 | 2.38 |
2007 | 2.62 |
2008 | 2.72 |
2009 | 2.96 |
2008 | 3.96 |
2014 | 3.89 |
சீனாவில் நிலக்கரி (மெட்ரிக் டன்னில்)[7] | |||
---|---|---|---|
உற்பத்தி | மொத்த ஏற்றுமதி | மொத்தக் கையிருப்பு | |
2005 | 2,226 | -47 | 2,179 |
2008 | 2,761 | nd | 2,761 |
2009 | 2,971 | 114 | 3,085 |
2010 | 3,162 | 157 | 3,319 |
2011 | 3,576 | 177 | 3,753 |
ஆங்காங் தவிர்த்து |
2010 இல் சீனாவின் நிலக்கரி நுகர்வு ஆண்டுக்கு 3.2 பில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்தது. சீனாவின் ஆற்றல் கொள்கையை நிர்ணயிக்கும் தேசிய அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த ஆணையமானது, ஆண்டுக்கு 3.8 பில்லியன் மெட்ரிக் டன்னிற்கு கீழே சீனாவின் நிலக்கரி நுகர்வானது இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்தது.
2008 ஆம் ஆண்டிலிருந்து சீனாவின் நிலக்கரி நுகர்வானது 9 விழுக்காடு அதிகரித்தது. [8]
பயன்பாடு | கருப்பு நிலக்கரி | கற்கரியாக்கக் கரி | புகைமலி நிலக்கரி |
---|---|---|---|
வீட்டுப் பயன்பாடு | 0 | 0 | 71.7 |
தொழிற்சாலை | 24.6 | 16.3 | 342.1 |
மின் நிலையம் | 0 | 0.2 | 1305.2 |
வெப்ப நிலையம் | 0 | 0.19 | 153.7 |
மற்ற பகிர்மானங்கள் [9] | 0 | 359.2 | 84.0 |