சு. வெங்கடேசன் | |
---|---|
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 சூன் 2019 | |
முன்னையவர் | இரா. கோபாலகிருஷ்ணன் |
தொகுதி | மதுரை |
மாநிலத்தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் | |
பதவியில் 24 சூன் 2018 – 15 ஆகத்து 2022 | |
முன்னையவர் | ச. தமிழ்ச்செல்வன் |
பின்னவர் | மதுக்கூர் இராமலிங்கம் |
பொதுச்செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் | |
பதவியில் 18 செப்டம்பர் 2011 – 24 சூன் 2018 | |
முன்னையவர் | ச. தமிழ்ச்செல்வன் |
பின்னவர் | ஆதவன் தீட்சண்யா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஹார்விப்பட்டி, ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா | 16 மார்ச்சு 1970
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | பி.ஆர். கமலா (தி. 1998) |
பிள்ளைகள் |
|
பெற்றோர் |
|
வாழிடம் | 4, ஹார்விப்பட்டி மேற்கு தெரு, மதுரை, தமிழ்நாடு |
முன்னாள் கல்லூரி | மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி |
வேலை | எழுத்தாளர், அரசியலர் |
விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (2011) |
புனைப்பெயர் | சு. வெ |
சு. வெங்கடேசன் (Su. Venkatesan, பிறப்பு: மார்ச் 16, 1970) என்பவர் ஓர் எழுத்தாளரும், அரசியல்வாதியும், இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவராக உள்ளார்.[1]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள ஹார்விபட்டியை சேர்ந்த விவசாயி இரா. சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு 1970 மார்ச் 16 அன்று மகனாகப் பிறந்தார்.[2] இவர் ஹார்விப்பட்டி நடுநிலைப்பள்ளியிலும், திருநகர் எம்.எம்.மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிக்கல்வியை பயின்றார். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989-இல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார்.[3] இவர் செம்மலர் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.[4] இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.[5] இவர் 1998-இல் பி.ஆர். கமலா என்பவரை காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார்.[6] இவர்களுக்கு யாழினி, தமிழினி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.[7]
சு. வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை இடிக்கும் போராட்டத்தில் தீவிர பங்கு கொண்டார்.[8] தமிழரின் தொல்நாகரீகத்தின் சான்றான கீழடி அகழாய்வு பிரச்சனையை உலகறியச் செய்ததில் முதன்மை பங்கு வகித்தவர்.[9] மாமதுரை போற்றுவோம் என்ற கலை விழாவை நடத்தியதில் முக்கியப் பங்களிப்பைச் செய்தவர்.[10] தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். சல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு இயக்கங்களில் முக்கிய பங்களிப்பை செய்தவர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் இவர் கலந்து கொண்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமாகிப் பின் அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தார்.[11] 2019-ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், மதுரை தொகுதியிலிருந்து, மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு,1.39 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]
வருடம் | தொகுதி | முடிவு | வாக்கு சதவீதம் | எதிர்கட்சி வேட்பாளர் | எதிர்கட்சி | எதிர்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|---|
2019 | மதுரை | வெற்றி | 44.20% | வி. வி. ஆர். ராஜ் சத்யன் | அஇஅதிமுக | 30.42% |
2024 | மதுரை | வெற்றி | 43.6% | இராம சிறீநிவாசன் | பா. ச. க | 22.38% |
தமிழ்த் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இவரின் காவல் கோட்டம் நாவலின் முக்கிய பகுதிகளைத் தழுவியே படமாக்கப்பட்டது.[28]
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார்.[29]
இவர் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை திரைப்படமாக எடுக்க முயற்சி நடைபெறுகிறது.[30]
{{cite web}}
: Check date values in: |date=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
(help)
ஜாதி பார்த்து சீட் கொடுப்பதில், கம்யூனிஸ்ட்களும் விதிவிலக்கல்ல. மதுரையில், அ.தி.மு.க., - அ.ம.மு.க.என, இரு தரப்பினரும் முக்குலத்தோரை நிறுத்தியிருப்பதால், மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில், சு.வெங்கடேசனை நிறுத்தியுள்ளது; அவர் நாயுடு.
{{cite web}}
: Check date values in: |date=
(help)
உத்தபுரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு சம்பவத்தில் களப் பணியை மேற்கொண்டார்
{{cite web}}
: Check date values in: |date=
(help)
He played an active part in the Uthapuram struggle to demolish the untouchability wall in Madurai district.
{{cite web}}
: Check date values in: |year=
(help)
{{cite web}}
: Check date values in: |year=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite book}}
: Check date values in: |date=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
(help){{cite web}}
: Check date values in: |date=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
(help)