1) கோபன்ஹேகனில் உள்ள நாளிதழ் ஊழியர்களுக்கு எதிராக திட்டமிடல்; 2) இந்தியாவின்மும்பையில் குண்டுவெடிப்புகளுக்கு சதித்திட்டமிடல்; 3) பாக்கித்தானிய தீவிரவாதக் குழு லஷ்கர்-ஏ-தொய்பாவிற்கு துணை புரிதல்; மற்றும் 4) 2008 மும்பை தாக்குதல்களில் அமெரிக்க குடியாளர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்து குற்றமிழைத்தல் (அக்டோபர் 27 & திசம்பர் 8, 2009)
தனது இந்திய நுழைவு எளிதாக அமையவும்[8] தான் பாக்கித்தானிய முஸ்லிம் என்பதை மறைக்கவும் தனது இசுலாமியப் பெயரை கிறித்தவப் பெயராக மாற்றிக் கொண்டார்.[9][10]
2002க்கும் 2005க்கும் இடைப்பட்டக் காலத்தில் பாக்கித்தானிற்குப் பலமுறை சென்று தீவிரவாதப் பயிற்சி மேற்கொண்டார். இதே காலத்தில் போதைப்பொருள் தடுப்பு நிர்வாகத்தின் தகவல் அளிப்பவராகவும் பணியாற்றி உள்ளார்.[11]
2006க்கும் 2008க்கும் இடையேலஷ்கர்-ஏ-தொய்பாவினருக்காகவும் பாக்கித்தானிய முன்னாள் இராணுவ அதிகாரிகளின் சார்பாகவும் 2008 மும்பை தாக்குதல்களின்போது தாக்கப்படக்கூடிய இலக்குகள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள ஐந்துமுறை இந்தியாவின்மும்பைக்குச் சென்றுள்ளார். இந்தத் தாக்குதல்களில் 168 பேர் கொல்லப்பட்டனர்.
முகமது நபிகள் குறித்த கேலிச்சித்திரங்கள் பதிப்பித்த டேனிசு நாளிதழுக்கு எதிரான தாக்குதலை நடத்த திட்டமிட 2009ஆம் ஆண்டு ஹெட்லி இங்கிலாந்திற்குப் பயணமானார். அக்டோபர் 2009 அன்று பாகித்தான் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டார்.[11][12]
தனது கைது மற்றும் குற்றமேற்பு மனுவிற்குப் பிறகு ஹெட்லி அமெரிக்க மற்றும் இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி தனது கூட்டாளிகளைக் குறித்த பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.[8][13][14][15]
அமெரிக்க அதிகாரிகள் இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு ஹெட்லியுடன் நேரடியாக விசாரணை மேற்கொள்ள அனுமதித்த போதிலும்[16]
இந்தியாவில் ஹெட்லியின் பெயரை வெளியிடாததற்காக ஐயப்பாடு எழுந்தது.[17]டகவூர் உசைன் ராணாவின் வழக்கின்போது ஹெட்லி மும்பை தாக்குதல்களுக்கு பாக்கித்தானின் அரசு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பெரிதும் துணை புரிந்ததாக விரிவான தகவல்களை வெளிப்படுத்தினார்.[18][19] இருப்பினும் மே 31, 2011 அன்று கூறிய தனது வாக்குமூலத்தில் ஐஎஸ்ஐ தலைமைக்கு இதில் தொடர்பில்லை எனவும் கூறினார்.[20]
↑
The FBI investigation has focused on Sajid Mir, Lashkar, and a major in Pakistan's Inter-Services Intelligence Directorate (ISI). But a U.S. prosecution could implicate Pakistani military chiefs who, at minimum, have allowed Lashkar to operate freely. U.S. pressure on Pakistan to confront both the military and Lashkar could damage counterterrorism efforts. "We can only push so far. It's very political. Sajid Mir is too powerful for them to go after. Too well-connected. We need the Pakistanis to go after the Taliban and al-Qaeda."
Sebastian Rotella (13 November 2010). "On the trail of Pakistani terror group's elusive mastermind behind the Mumbai siege". Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/11/13/AR2010111304907_pf.html. பார்த்த நாள்: 14 November 2010.