தயாளன் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஏ. மித்ர தாஸ் |
தயாரிப்பு | மோடேர்ன் தியேட்டர்ஸ் காசி மகாராஜா பிக்சர்ஸ் |
கதை | எட்டையபுரம் 'இளையராஜா' காசி விஸ்வநாத பாண்டியன் உரையாடல்: குப்புசாமி கவி |
நடிப்பு | பி. யு. சின்னப்பா டி. ஆர். மகாலிங்கம் எஸ். எஸ். கோக்கோ வி. எம். ஏழுமலை கே. வி. ஜெயகௌரி பி. எஸ். ஞானம் |
வெளியீடு | திசம்பர் 20, 1941 |
ஓட்டம் | . |
நீளம் | 16000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தயாளன் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் தயாரித்த இப்படத்தை ஏ. மித்ர தாஸ் இயக்கினார்.[1] இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, டி. ஆர். மகாலிங்கம், கே.வி.ஜெயகௌரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
மன்னர் அற்புதவர்மனுக்கு இறந்த முதல் மனைவியிடமிருந்து தயாளன் என்றும், இரண்டாவது மனைவியிடமிருந்து பரதன் என்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். பத்மாவதி என்ற இளம்பெண்ணையும் வளர்த்து வருகிறார். தயாளன் பத்மாவதியின் மீது காதல் கொள்கிறான். துன்மதி என்னும் வேலைக்காரன் ஒருவன், மன்னரின் மனதில் நஞ்சூட்டி தலைமையமைச்சனாகிறான். அவனது மகன் பிரதாபன் தந்தையுடன் சதி செய்து நாட்டைக் கைப்பற்றத் திட்டமிடுகிறான். தயாளன் அரசரைக் கொன்று இராசியத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறான் என்று துன்மதி மன்னரை நம்ப வைக்கிறான். இதனால் அரசன் தன் மகனுக்கு மரண தண்டனை விதிக்கிறார். தயாளன் தன் நண்பர்களின் உதவியுடன் சிறையிலிருந்து தப்பிக்கிறான். பல திருப்பங்களுக்குப் பிறகு, தலைமையமைச்சர் மற்றும் அவனது மகனின் சதியை தயாளன் அம்பளப்படுத்துகிறான். அரசன் தன் முட்டாள்தனத்தை உணர்கிறார். இறுதியில் துன்மதியும் பிரதாபனும் கொல்லப்படுகிகின்றனர். தயாளன் பத்மாவதியை மணந்து அரசனாக முடிசூடுகிறான்.[3]
இந்தப் பட்டியல் படத்தின் பாடல் புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.[3]
|
|
இப்படத்தை டி. ஆர். சுந்தரம் தனது சொந்த நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸ் மூலம் தயாரித்தார். ஏ. மித்ர தாஸ் இயக்கினார். எட்டையபுரம் 'இளையராஜா' காசி விஸ்வநாத பாண்டியன் கதை எழுத. குப்புசாமி கவி உரையாடல் எழுதினார்.[2] நடன இயக்குநர் குல்கர்னி தன் குழுவினருடன் நடனத்தை அமைத்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற ஏறக்குறைய அனைத்து பாடல்களுக்கும் இந்தி மற்றும் பெங்காலி பாடல்களின் மெட்டுகளைத் தழுவிப் பயன்படுத்தபட்டன. எல்லாப் பாடல்களும் பாட்டுப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளமே கவர்ந்து எழுகிறது என்ற ஒரு பாடல் உள்ளது, இது ஆதி தாளத்தில் சாயதரஞ்சனி கருநாடக இராகத்தில் பி. யு. சின்னப்பா பாடியது. இதற்கு எந்த இசை அமைப்பாளர் இசையமைத்தார் என்பது குறிப்பிடப்படவில்லை. பாடல் வரிகளை மகாராஜா வாத்தியார் எழுதியுள்ளார்.
எண். | பாடல் | பாடகர்/கள் | நீளம் (நி:விநா) |
---|---|---|---|
1 | "ஜகன் மாயா, சஹாயா" | கே. வி. ஜெயகவுரி, குழுவினர் | |
2 | "ஆனந்தம் தரும் தினமே" | கே. வி. ஜெயகவுரி | |
3 | "இதுபோதே காண்பாளோ" | ||
4 | "அன்பே உமதின்பம் தனையே அடியாள் அடைவேணோ" | ||
5 | "உள்ளமே கவர்ந்து எழினாள்" | பி. யு. சின்னப்பா | |
6 | "பிரிய நேசியே, எந்தன் மானே" | ||
7 | "முத்துக்கவி சித்தரித்த" | ||
8 | "வனிதாமணியே வாஞ்சையின் கனிவே" | பி. யு. சின்னப்பா, கே. வி. ஜெயகவுரி | |
9 | "கோமளமானே குணபூஷணமே" | 2:43 | |
10 | "பூஜா பலமிதுதானோ" | ||
11 | "எனக்கே ஜெயம் கிடைத்ததுவே" | டி. ஆர். மகாலிங்கம் | |
12 | "காளிங்க நர்த்தனன்" | "பேபி" ஜெயலட்சுமி | |
13 | "யோகமிது ராஜபோகம்" | சகாதேவன் | |
14 | "பரிமள மிகுவன" | டி. ஆர். மகாலிங்கம், என். வி. கிருஷ்ணன் | |
15 | "வீணான பேராசை ஆகாது" | காளி என். ரத்தினம், சி. டி. ராஜகாந்தம் | |
16 | "பஞ்சத்தினாலடி சின்னி" | காளி என். ரத்தினம் | |
17 | "கண்ணான பெண்ணாளைக் காணவில்லையே" | காளி என். ரத்தினம், பி. எஸ். ஞானம் | 2:21 |
18 | "சுந்தரி ஆனந்த பைரவி" | காளி என். ரத்தினம், வி. எம். ஏழுமலை | 7:01 |
19 | "மாய வாழ்வே பாராய்" | P. G. Venkatesan | |
20 | "நாமே கூடி நாளெல்லாம் உழைத்தோம்" |
இப்படம் குறித்து 2014 இல் ராண்டார் கை எழுதுகையில், படம் வணிக ரீதியாக சராசரி வெற்றி மட்டுமே பெற்றது என்று கூறினார். “சின்னப்பா, பெருமாள் ஆகியோரின் நடிப்பும், மெல்லிசை, சிறப்பான நடனமும் இந்தப் படத்தில் நினைவில் நிற்கிறது” என்றார்.[2]