நாரான்கொட லியனாரச்சிலாகெதர திசாரா சிரந்த பெரேரா (சிங்களம்: තිසර පෙරේරා; பிறப்பு: 3 ஏப்ரல் 1989, கொழும்பு) அல்லது சுருக்கமாக திசாரா பெரேரா இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சகல துறை ஆட்டக்காரராவார். 2009 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இந்தியா அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானார். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வயப துடுப்பாட்ட அணி கோல்ட் அணி, இலங்கை ஏ அணி ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளார்.
26 ஜூலை 2013 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில், பெரேரா ராபின் பீட்டர்சன் வீசிய ஒரு ஓவரில் 35 ஓட்டங்கள் எடுத்தார்.. (6, Wd, 6,6,6,4,6), இது ஒருநாள் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் விட்டுக்கொடுத்த வரிசையில் இரண்டா,ம் இடம்பிடித்தது.
பெரேரா 2014 ஐசிசி உலக இருபதுக்கு 20 வென்ற இலங்கை அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.[1] பிப்ரவரி 12, 2016 அன்று நடந்த போட்டியில் இவர் ஹாட்ரிக் இலக்கினைக் கைப்பறியதன் மூலம் ஒருநாள் மற்றும் பன்னாட்டு இருபது20 ஐ இரண்டிலும் ஹாட்ரிக் எடுதத் இரண்டாவது வீரர் எனும் சாதனையினை இவர் ப்டைத்தார். இதர்கு முன்பாக இந்தச் சாதனையினை பிரட் லீ படைத்தார் [2] ஆஸ்திரேலியாவில் அவர் " பாண்டா " என்ற புனைப்பெயரால் அறியப்படுகிறார், இதுபிபிஎல்லில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஜார்ஜ் பெய்லி உடன் பணிபுரிந்த காலத்தில் இவருக்கு வழங்கப்பட்டது.[3]
திசாரா பெரேரா வத்தலா புனித அந்தோணி கல்லூரியில் பட்டம் பயின்ற போது இவர் தனது துடுப்பாட்ட வாழ்க்கையைத் தொடங்கினார்.[4] பின்னர் அவர் கொழும்பின் புகழ்பெற்ற செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றார், இது இலங்கை துடுப்பாட்ட வீரர்களான சமிந்த வாஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரை உருவாக்கியுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல போட்டிகளிலும் கல்லூரிக் காலங்களில் பயின்றுள்ளார். மேலும் 2008 ஐ.சி.சி 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் . நவம்பர் 2008 இல், கோல்ட்ஸ் துடுப்பாட்ட சங்கத்தில் முதல் தரத் துடுப்பாட்டப்போடிகளில் விளையாடினார்.[1] 18 வயதிற்கு உட்பட்டோருக்கான 19 ஒருநாள் போட்டிகளில் 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இலங்கையின் தேசிய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் வீச்சாளரும் ஆவார்.[5]
கொல்கத்தாவில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு தாமதமாக அழைப்பு விடுத்ததன் மூலம், டிசம்பர் 2009 இல் பெரேரா இலங்கைக்காக சர்வதேச அளவில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போடியில் இவர் அறிமுகமானார்.[1] ஆகஸ்ட் 2010 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஐந்து இலக்குகளை முதல்முறையாகக் கைப்பற்றினார். இந்தப்போட்டியில் ஆட்டநாயகன் விருதினையும் வென்றார்.[6] அதே சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார்.[6]
இந்தியா , இலங்கை மற்றும் வங்காளதேசத்தில் நடைபெற்ற 2011 ஆம் ஆண்டின் துடுப்பாட்ட உலகக் கோப்பைத் தொடரில் இவர் விளையாடினார். இந்தத் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டி வரை சென்றது. இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 10 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் பந்துவீச்சில் முக்கிய இலக்கான கவுதம் கம்பீரை ஆட்டமிழக்கச் செய்தார்.[7] இந்த ஆண்டின் பிற்பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடருக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஒருநாள் மற்றும் இருபது -20 அணிகளுக்கு மட்டுமே விளையாடத் தேர்வானார், ஆனால் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடருக்காக இவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.[8] அவர் அந்தத் தொடரில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடினார் கிம்பர்லியில் நடந்த போட்டியில் இலங்கையை வெற்றிபெறச் செய்ய 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்கள் எடுத்து தனது முதல் ஐம்பது ஓட்டங்களை பதிவு செய்தார்.[9] பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான 2012 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் ஆறு இலக்குகளைக் கைப்பற்றி தனது சிறந்த பந்துவீச்சினைப் பதிவு செய்தார்.