தூங்காவனம் / சீகட்டி ராஜ்ஜியம் | |
---|---|
இயக்கம் | ராஜேஸ் எம்.செல்வா |
தயாரிப்பு | கமல்ஹாசன் எஸ். சந்திரஹாசன் கோகுலம் கோபாலன் |
திரைக்கதை | கமல் ஹாசன் |
இசை | ஜிப்ரான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சானு வருகீச் |
படத்தொகுப்பு | சான் மொஹம்மட் |
கலையகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் சிறி கோகுலம் மூவிஸ் |
விநியோகம் | வைட் ஆங்கிள் கிரியேசன்ஸ் |
வெளியீடு | 10 நவம்பர் 2015[1] |
ஓட்டம் | 127 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி |
தூங்காவனம் என்பது 2015இல் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ராஜேஸ் எம்.செல்வா' இயக்கினார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் முதன்மைக் கதாப்பாத்திரமாக நடித்தார். இவருடன் திரிசா, பிரகாஷ் ராஜ், கிஷோர் ஆகியோரும் நடித்தனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்ட படமாகும், தெலுங்கில் சீகட்டி ராஜ்ஜியம் எனும் பெயரில் வெளியானது. இத்திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்லீப்லஸ் னைட் எனும் திரைப்படத்தின் தழுவல் ஆகும். இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் மற்றும் சிறி கோகுலம் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரித்தன. இது பின்னர் ஹிந்தியில் 'காக்கி தா ரியல் போலீஸ்' என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இப்படம் தமிழகத்தில் முதல் நாளில் சுமார் ₹4 கோடி (530,000 அமெரிக்க டாலர்) வசூலித்தது.
இப்படத்திற்காக ஒரே ஒரு பாடல் மட்டும் உருவாக்கப்பட்டது. "நீயே உனக்கு ராஜா" எனும் தொடங்கும் அப்பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார் மற்றும் கமல்ஹாசன் அப்பாடலை பாடியுள்ளார்.
தமிழ் பாடல்கள்
எண். | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|---|
1. | "நீயே உனக்கு ராஜா" | வைரமுத்து | கமல்ஹாசன், ஐஸ்வர்யா, யாசின் நிசார் | 4:33 |
தெலுங்கு பாடல்கள்
எண். | பாடல் | வரிகள் | பாடகர்கள் | Length |
---|---|---|---|---|
1. | Dhairyam Veedi ("தைரியம் வீதி") | ராமஜோகய்யா சாஸ்திரி | கமல்ஹாசன், ஐஸ்வர்யா, யாசின் நிசார் | 4:33 |