தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | நேத்தன் மெக்கெல்லம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | BB McCullum (brother), SJ McCullum (father) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 156) | செப்டம்பர் 8 2009 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 26) | 19 செப்டம்பர் 2007 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1999–இன்று | ஒடாகோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2010 | கல்கத்தா நைட்ரைடர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–இன்று | சகாரா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 2 2011 |
நேத்தன் லெஸ்லி மெக்கெல்லம் (Nathan McCullum, பிறப்பு: செப்டம்பர் 1, 1980) நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடினார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை புறத்திருப்பப் பந்து வீச்சாளர் ஆவார். 2016 ஐசிசி உலக இருபது20 போட்டிக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார்.[1][2]
இவர் 2010 ஆம் ஆண்டு வரை உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். இவர் லங்காஷயர், புனே வாரியர்சு இந்தியா, சன்ரைசர்ஸ் ஐதராபாத் ,சிட்னி சிக்சர்ஸ்,மற்றும் கிளாமோர்கன் அணிக்காக விளையாடினார். 2011 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் 2 போட்டிகளில் விளையாடினார். துவக்கவீரராக களம் இறங்கிய இவர் 26 ஓட்டங்கள் எடுத்தார். இவரின் சராசரி 26.00 ஆகும். மேலும் இவரின் ஸ்டிரைக் ரேட் 118.18 ஆகும். பந்துவீச்சில் 5 ஓவர்கள் வீசி 34 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். பந்துவீச்சு சராசரி 6.80 ஆகும்.
செப்டம்பர் 19, 2007 இல் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.இந்தப் போட்டியில் 4 பந்துகளில் 1 ஓட்டங்களை மட்டும் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3] பெப்ரவரி 15, 2009 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடினார். மார்ச் 26,2016 இல் கொல்கத்தா ,ஈடன் கார்டன்ஸ் அரங்கத்தில் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் இவர் சந்தித்த முதல் பந்திலேயே முஷ்பிகுர் ரகீம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில், 2 ஓவர்கள் வீசி 6 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் [4] வெற்றி பெற்றது.
செப்டம்பர் 8,2009 இல் கொழும்பில் நடைபெற்ற காம்பக் கோப்பைத் தொடரில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமனார்.இந்தப் போட்டியில் 7 ஓவர்கள் வீசி 27 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. பின் மட்டையாட்டத்தில் இவர் சந்தித்த முதல் பந்திலேயே லசித் மாலிங்க பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5] ஆகஸ்டு 19,2009 இல் செஞ்சூரியனில் நடைபெற்ற தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் துவக்க ஓவர்களை வீசினார். 5 ஓவர்களை வீசி 29 ஓட்டங்களி விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. பின் மட்டையாட்டத்தில் 14 பதுகளில் 10 ஓட்டங்களை எடுத்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[6] 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டியில் இவர் நியூசிலாந்து அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் அரையிறுதி வரை சென்றனர்.
2015 -2016 ஆம் ஆண்டுகளில் சதர்ன் எமிஸ்பர் தொடரின் முடிவோடு அனைத்து வடிவப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[1] 2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் விளையாடும் அணியில் இவர் இடம்பெற்றார். மார்ச் 26, 2016 இல் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இறுதியாக விளையாடினார்.[7]