பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்


சட்டம்.

பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா) (டெர்ரிஸ்ட் அன்ட் டிஸ்ரப்டிவ் ஆக்டிவிட்டீஸ் (பிரவென்சன்) ஆக்ட்) இந்தியாவின் தீவிரவாத செயல் தடுப்பு சட்டமாக கொண்டுவரப்பட்டு 1985 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த சட்டமாகும். (1987 இல் இச்சட்டத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டது,) இச்சட்டம் பஞ்சாப் மாநிலத்தில் அன்றைய காலகட்டத்தில் நிலவிய தீவிரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் பொருட்டுக் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தினைத் தவறுதலாகப்[1] பயன்படுத்தி வந்த காரணத்தால் மக்களின் செல்வாக்கு பெற 1989, 1991, மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் இச்சட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது.

இச்சட்டத்தினால் குற்றவாளி என தீர்ப்பாணை பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீத்திற்கும் குறைவே. இச்சட்டப்படி கைது செய்யபட்டோர் காவல் அலுவலரின் முன்னிலையிலேயே குற்ற செயலை ஒத்துகொள்ளவேண்டும், இதன் பொருட்டு அவர்களின் துன்புறுத்தலில் நீதிமன்றம் தலையீடாது. அவர் ஒத்துகொண்டதையே சாட்சியாக நீதிமன்றம் எடுத்துகொள்ளும்.

இச்சட்டத்தின் படி கைது செய்தவரை விசாரிக்க அமைக்கப்பட்ட தனி நீதிமன்றமான தடா நீதிமன்றமே இவ் வழக்கை விசாரணை செய்யும். 1993 இல் ஏற்பட்ட பம்பாய் வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்வை இந்நீதிமன்றமே விசாரணை செய்து தீர்ப்பு வழங்கியது.

இந்த சர்ச்சைக்குரிய சட்டம் 2002-2004 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் அப்பொழுது பொறுப்பேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் இரத்து செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]