பாடி ஏரி Lake Badi | |
---|---|
![]() பாடி ஏரியின் காட்சி | |
அமைவிடம் | உதயப்பூர், இராசத்தான், ![]() |
ஆள்கூறுகள் | 24°36′58″N 73°37′20″E / 24.616105°N 73.622127°E |
ஏரி வகை | நன்னீர் ஏரி |
அதிகபட்ச நீளம் | 180 m (590 அடி) |
அதிகபட்ச அகலம் | 18 m (59 அடி) |
மேற்பரப்பளவு | 155 km2 (60 sq mi) |
ஏரி பாடி (Lake Badi) என்ற இந்த ஏரி, இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள உதயப்பூர் நகரத்தில் அமையப் பெற்றுள்ள செயற்கை நன்னீர் ஏரியாகும். உதயப்பூரிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாடி என்ற நாட்டுப்புறப் பகுதியில் அமைந்துள்ள இது, அப்பகுதி குடிநீர் தேவையை சரிசெய்யும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஏரி ஆகும்[1]
1625 - 1680 களின் இடைபட்ட காலத்தில், கட்டிமுடிக்கப்பட்ட இந்த ஏரியானது பஞ்சத்தின் பேரழிவுகளில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடன் "மகாராண ராஜ் சிங்" என்பவரால் தாபிக்கப்பட்டது. தன் தாயார் ஜனதேவிக்கு பிறகு "ஜியான் சாகர்" என்று பெயரிட்ட இந்த ஏரி, அனைத்து வித தண்ணீர் தட்டுபாடுகளை சரி செய்யும் நீர்நிலையாக விளங்குகிறது.[2]
155 கிலோ மீட்டர் பரப்பளவில் படர்ந்துள்ள இது, 180 மீட்டர் நீளமும் 18 மீட்டர் அகலமும் கொண்டது. 1973 ஆம் ஆண்டில் வானம் பொய்த்தபோது மக்களுக்கு ஏற்பட்ட குடிநீர் பிரச்சினையை இந்த ஏரிதான் சரிசெய்தது குறிப்பிடத்தக்கது.[3]
சாத்ரித் எனப்படுகிற முக்கலை அரங்குகள், மற்றும் நீல வானத்தை பிரதிபலிக்கும் முடிவில்லாத அமைதியான ஒரு இயற்கை காட்சியை பார்வையாளர்களுக்கு இவ்வேரி வழங்குகிறது. மேலும் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ள இது, காண வரும் பார்வையாளர்கள் பயன்படுத்தும் வகையில் மகிழுந்துகள், பேருந்துகள் போன்றவை இந்த இடத்திற்கு உதயப்பூர் நகரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.[4]