பிரீதிகா ராவ் | |
---|---|
![]() 2015 ஆம் ஆண்டின் ஒரு நிகழ்ச்சியின் போது | |
பிறப்பு | பிரீதிகா ராவ் |
தேசியம் | இந்தியன் |
கல்வி | சோப்ஃபியா கல்லூரி |
பணி | நடிகர், எழுத்தாளர், பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 2012–தற்போது வரை |
அறியப்படுவது | ஆலியா (பேந்தியா) |
உறவினர்கள் | அம்ரிதா ராவ் (சகோதரி) |
பிரீதிகா ராவ் (Preetika Rao) என்பவர் இந்திய நடிகை, எழுத்தாளர், பாடகர் மற்றும் விளம்பரத்தோற்றத்தில் நடிப்பவர் ஆவார். இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்ச்சியான பீன்தேயா மூலம் பிரபலமானார்.[1][2] இந்தத் தொடரானது தமிழ் மொழியில் அலைபாயுதே எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[3]
பிரீதிகா ராவின் தந்தை மும்பையில் ஒரு விளம்பர நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார். இவருக்கு அம்ரிதா ராவ் எனும் சகோதரி உள்ளார். அவர் பாலிவுட்டில் நடிகையாக உள்ளார்.இவர், சோஃபியா கல்லூரியில் வரலாற்றுப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் இதழ் மற்றும் விளம்பரப் பிரிவில் பட்டயப் படிப்பினை முடித்துள்ளார்.[4][5]
தன்னுடைய விளம்பரத் தோற்ற வாழ்க்கையினை கேட்பரி டைரி மில்க் விளம்பரத்திலிருந்து தொடங்கினார். அந்த விளம்பரத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்தார். அதனை சூஜித் சர்க்கார் என்பவர் இயக்கியிருந்தார். பின் திரைப்பட இதழியழுக்காக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி டெக்கன் குரோனிக்கள், சவுத் சைட், பெங்களூரு மிர்ரர், இந்தியன் ஃபோரம்சு, ஏசியன் ஏஜ் போன்ற இதழ்களுக்குச் சென்றார்.
தனது கல்வியைத் தொடருவதற்காக தனக்கு வந்த பாலிவுட் திரைப்படங்களான ஜானே து...யா ஜனே னா (2008) மற்றும் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற ஆஷிக்கி 2 போன்ற திரைப்பட வாய்ப்புகளை மறுத்தார்.[6]
பிரீதிகா ராவ், சிக்கு புக்கு எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தை மீடியா ஒன் குளோபல் நிறுவனம் தயாரித்திருந்தது. இவர்கள் ரசினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தைத் தயாரித்தவர்கள் .[7] இந்தத் திரைப்படத்தில் ஆர்யா உடன் நடித்திருப்பார். நியூயார்க் திரைப்பட அகாதமியில், இதழ் ஒளிபரப்பு தொடர்பான பட்டயப்படிப்பு படிக்கச் சென்றதால் திரைப்பட வாய்ப்புகளை ஏற்கவில்லை.[8]
2014 ஆம் ஆண்டில், பிராந்திய சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு தேசியத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கச் சென்றார். கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளிவந்த பீந்தேயா எனும் தொடரில் ஆலியா ஜெயின் அப்துல்லா கதாப்பாத்திரத்தில் நடித்தார். சனவரி, 2015 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற கலாகர் விருது (அச்சு ஊடங்களுக்கான விருது) நிகழ்ச்சியில் சிறந்த பெண் நடிக்கைக்கான விருதினைப் பெற்றார்.[9] மேலும் அதே ஆண்டில் சிறந்த அறிமுக நடிகைக்கான ஜீ கோல்டு பெஸ்ட் விருதினைப் பெற்றார்.[10]
2010 ஆம் ஆண்டில் தமிழில் சிக்கு புக்கு எனும் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்தார். கோச்சடையான் திரைப்படத்தைத் தயாரித்த குளோபல் ஒன் நிறுவனம் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்தது. இந்தத் திரைப்படத்தில் அம்மு மீனாள் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஆர்யா முதன்மைக் கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் கதாப்பத்திரத்தில் நடிக்க முதலில் வித்யா பாலனிடம் தான் கேட்கப்பட்டது.[11] பின் பிரீதிகா ராவை ஒப்பந்தம் செய்தனர். மணிகண்டன் என்பவர் இந்தத் திரைப்படத்தை இயக்கினார். டிசம்பர் 3, 2010 இல் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியது. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றது. இந்தத் திரைப்படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்தது.[12]
2012 ஆம் ஆண்டில் தெலுங்கில் பிரியுடு எனும் திரைப்படத்தில் மது லதா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
(help)