தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உயரம் | 6 அடி 3 அங் (1.91 m) | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 264) | சூன் 25 1932 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சூன் 25 1946 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஏப்ரல் 12 2009 |
பில் போவ்ஸ் (Bill Bowes, சூலை 25, 1908, இறப்பு: செப்டம்பர் 4, 1987) இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 372 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1932-1946 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
பில் போவ்ஸ் எல்லந்தில் 25 ஜூலை 1908 இல் பிறந்தார். இவரது தந்தை ஜான் போவ்ஸ் ஒரு ரயில்வே பணியாளராக இருந்தார், லங்காஷயர் மற்றும் யார்க்ஷயர் ரயில்வேயில் பணிபுரிந்ததால் இவரது குடும்பம் அடிக்கடி பல இடங்களில் இடம்பெயர்ந்தது. 1914 ஆம் ஆண்டில், லீட்ஸ், ஆர்ம்லியில் ஒரு சரக்கு கண்காணிப்பாளராக ஆன பிறகு இவர்கள் அங்கு குடியேறினர். எக்ஸ்பிரஸ் டெலிவரீஸ் என்ற தனது 1949 ஆம் ஆண்டு வெளியான சுயசரிதையில், போவ்ஸ் ஒரு தொழில்முறை துடுப்பாட்ட வீரராக வேண்டும் என்ற சிறுவயதில் ஒருபோதும் நினைத்தது இல்லை என்று கூறுகிறார், மாறாக இவர் இந்த விளையாட்டில் வந்தது தற்செயலாக நடந்தது எனத் தெரிவித்துள்ளார். [1] இவர் மற்ற சிறுவர்களுடன் தெரு துடுப்பாட்டம் விளையாடினார், மேலும் இவர் உள்ளூர் ஆர்ம்லி சங்கத்தில் சில வீரர்கள் விளையாடுவதனைப் பார்க்கத் தொடங்கினார்.அந்த சங்கத்தின் மைதானம் இவரது வீட்டிற்கு அருகில் இருந்தது. இவர் குறிப்பாக டாமி டிரேக் என்று அழைக்கப்படும் ஒரு ஆர்ம்லி விரைவுப்பந்து வீச்சாளரைப் பாராட்டினார், மேலும் இவரைப் போலவே பந்துவீச வேண்டும் என நினைத்தார். தனது துடுப்பாட்ட வாழ்க்கை முழுவதும் தான் இவரைப் போலவே இயன்ற அளவு பந்துவீசினார்.[2] போவ்ஸ் தனது இரண்டு பள்ளிகளான ஆர்ம்லி பார்க் கவுன்சில் பள்ளி மற்றும் வெஸ்ட் லீட்ஸ் உயர்நிலைப்பள்ளி ஆகிய அணிகளைத் துடுப்பாட்டப் போட்டியிகளில் பிரதிநிதித்துவப்படுத்தினார். பின்னர் பள்ளி அணிகளுக்காக இவர் மும்முறை எடுத்தார். [2]
1924 இல் பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு, போவ்ஸ் லீட்ஸ் ஒரு நில நிறுவனத்தில் பணிபுரிந்தார்.ஆனால் ஆர்ம்லியில் ஒரு வெஸ்லியன் சண்டே பள்ளி அணிக்காக வார இறுதி நாட்களில் தொடர்ந்து துடுப்பாட்டம் விளையாடினார். [3] 1927 ஆம் ஆண்டின் ஈஸ்டருக்குப் பிறகு, வடமேற்கு லீட்ஸில் உள்ள கிர்க்ஸ்டால் துடுப்பாட்ட சங்கத்தில் சேர அழைக்கப்பட்டார். [4] கிர்க்ஸ்டாலின் இரண்டாவது அணிக்கான தனது முதல் போட்டியில், இவர் மும்முறை இழப்புகள் உட்பட ஐந்து ஓட்டங்களுக்கு ஆறு இழப்புகளை வீழ்த்தினார். [5] போவ்ஸ் 1927 ஆம் ஆண்டில் கிர்க்ஸ்டல் துடுப்பாட்ட அணிக்காக பல வெற்றிகரமான போட்டிகளில் விளையாடினார். மேலும் தொழில்முறை ரீதியாக துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட மற்ற லீக் துடுப்பாட்ட சங்கங்களிடம் இருந்து சலுகைகளைப் பெறத் தொடங்கினார். இவ்வாறான சலுகைகள் இவர் முன்னர் பணிபுரிந்த நிறுவனத்தின் ஒரு வாரகால ஊதியத்தினை விட இது அதிகமாகும்.[6]
மேர்லபோன் துடுப்பாட்ட சங்க ஊழியர்களுடன் சேர போவ்ஸ் ஏப்ரல் 1928 இல் லண்டனுக்குச் சென்றபோது, இவர் தனது பெற்றோரின் நண்பர்களாக இருந்த பியூமண்ட் குடும்பத்துடன் தங்கினார். இவர் பல ஆண்டுகள் அங்கு வாழ்ந்தார். இவர்கள் மூலம்தான் இவர்தனது மனைவியினைச் சந்தித்தார். அவர் இவர்களின் மருமகள் ஆவார். [7] இந்தத் தம்பதி செப்டம்பர் 30, 1933 அன்று ஹாரோவின் செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர், மேலும் டோனி (பிறப்பு 1935) மற்றும் வேரா (1939) ஆகிய இரு குழந்தைகளைப் பெற்றனர். [8] [9]