பேரழகன் (Perazhagan) 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] சசி சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா (மாறுபட்ட இரு வேடங்களில்), ஜோதிகா (மாறுபட்ட இரு வேடங்களில்), மற்றும் விவேக், மனோரமா, மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பழனிபாரதி, கபிலன், பா.விஜய், தாமரை, சிநேகன் ஆகியோரின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது ஜோதிக்காவுக்கு கிடைத்தது.[3]