மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகக் கட்டடம் | |
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1990 |
வேந்தர் | ஆர். என். ரவி[1] |
துணை வேந்தர் | என். சந்திரசேகர்[2] |
அமைவிடம் | , 8°45′49″N 77°38′55″E / 8.7635°N 77.6485°E |
வளாகம் | ஊரகம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
இணையதளம் | http://www.msuniv.ac.in |
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1990 செப்டம்பர் 7 ஆம் நாள் திருநெல்வேலி நகரில் கொக்கிரகுளம் பகுதியில் இருந்த மாவட்ட ஆட்சியக வளாகத்தில் தொடங்கப்பட்டது. கஜேந்திர காட்கர் கமிஷன் பரிந்துரைக்கமைய மதுரை காமராசர் பல்கலைக்கழக தென்பகுதிக் கல்லூரிகள் பிரிக்கப்பட்டு இப்பல்கலைக்கழகம் உருவானது.
இப்பல்கலைகழகத்திற்கு தமிழ் பேராசிரியரான மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் கலை, மொழி, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 24 துறைகள் உள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் உள்ள 102 கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இத்ன் முக்கிய வளாகம் மற்றும் பல்கலைக்கழக துறைகள் செயல்பட 520 ஏக்கர் அபிஷேகபட்டியில், திருநெல்வேலியில் அமைந்துள்ளது. மற்றொரு 120 ஏக்கர் ஆழ்வார்குறிச்சியிலும், சுற்றுச்சூழல் அறிவியல் துறை பரமகல்யாணி கல்லூரியிலும் (0.49 கிமீ) மற்றும் ராஜக்கமங்கலதில் கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் 70 ஏக்கர் (280,000 மீ) உள்ளது.
பல்கலைக்கழக அதிகாரத்தின் கீழ் பட்டியலில் 65,000 மாணவர்கள், 91 இணைப்பு கல்லூரிகள், 5 மனோ கல்லூரிகள்உள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (MSU) , அதாவது திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று தெற்கு மாவட்டங்களில் உள்ள மக்களின் நீண்ட கால கல்வியின் தேவைகளை பூர்த்தி செய்ய 7 செப்டம்பர் , 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட்து. பல்கலைக்கழக பட்டியலில் 65,000 மாணவர்கள், இதன் கீழ் 61 இணைப்பு கல்லூரிகள், 5 மனோ கல்லூரிகள் மற்றும் 1 சட்டகல்லூரி உள்ளது. இவற்றுள் மூன்று கல்லூரிகள் (செயின்ட் ஜான்ஸ் கல்லூரி], இந்து கல்லூரி, சாரா டக்கர் கல்லூரி) 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.
பல்கலைக்கழகத்தில் 24 கல்வி துறைகள் உள்ளன ராஜக்கமங்கலதில் உள்ள கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் மையம் ஆழ்வார்குறிச்சி பல்கலைகழக மாணவர்கள் அனைத்து பல்கலைக்கழக துறைகளில் இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் UNO பல்வேறு நிதி நிறுவனங்களிலிருந்து ஆராய்ச்சி திட்டங்கள் பெறுகின்றனர். முதுநிலை படிப்பு, எம்.பில் மற்றும் பிஎச்.டி திட்டங்கள் (பகுதி நேரம் மற்றும் முழு நேரம்) உள்ளன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, புது தில்லி, மத்திய அரசின் தலைமை உயர் கல்வி அமைப்பு, மார்ச் 29, 1994 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி பெற அனுமதி வழங்கியுள்ளது.
இணை கல்லூரிகளில், தொழில் முனைவோருக்கான ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு ஆண்டு கால டிப்ளமோ படிப்புகள், மேலும் திறன் வளர்ச்சி டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.