மயில்சாமி அண்ணாதுரை | |
---|---|
![]() | |
பிறப்பு | 2 சூலை 1958 கோதவாடி, கோயம்புத்தூர் மாவட்டம், சென்னை மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
கல்வி கற்ற இடங்கள் | இளநிலை பொறியியல், (1980) Govt. College Of Technology, கோயம்புத்தூர், முதுநிலை பொறியியல் (இலத்திரனியல்),1982, பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி கோயம்புத்தூர். |
அறியப்படுவது | சந்திரயான்-1, சந்திரயான்-2, இந்திய விண்வெளித் திட்டம் |
குறிப்புகள் | |
திட்ட இயக்குநர், சந்திரயான்-1 & சந்திரயான்-2 |
மயில்சாமி அண்ணாதுரை[1] (Mayilsamy Annadurai)(பிறப்பு: சூலை 2, 1958; கோதவாடி - கிணத்துக்கடவு, பொள்ளாச்சி) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும்[2] , தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவராகவும் உள்ளார்[3]. இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில்[4] இயக்குனராகப் பணிபுரிந்தார். அது சமயம் முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கிய சாதனை இவரைச் சாரும்.[5]
இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குநர். இவர் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில்[6] தனது பொறியியல் இளங்கலைக் கல்வியைக் கற்றார். கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அண்ணாதுரை இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப்பெற்றுள்ளார்.
இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், "கையருகே நிலா" என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள், சந்திரயான் பணி ஆகியவை அடங்குவதான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணம் பற்றிய தொடர் கட்டுரை ஒன்றை தமிழ் நாளிதழான தினத் தந்தியில், "கையருகே செவ்வாய்" என்ற தலைப்பில் வாரந்தோறும் ஞாயிறன்று எழுதிவருகிறார்.
தமிழகப் பள்ளிக்கல்வியின் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது.
1958ஆம் ஆண்டு சூலைத் திங்கள் இரண்டாம் நாள் கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா கோதவாடி கிராமத்தில் மயில்சாமி - பாலசரசுவதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.[7] பதினோராம் வகுப்பு வரையான தனது அடிப்படைக் கல்வியைத் தாய்மொழியாம் தமிழில் அரசாங்கப் பள்ளிகளிலேயே படித்தவர். புகுமுக வகுப்பை பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியிலும், பொறியியல் இளநிலையைப் பட்டப்படிப்பை அரசு தொழில் நுட்பக்கல்லூரி, பொறியியல் முது நிலைப் பட்டப் படிப்பை பூ. சா. கோ.தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் பொறியியல் முனைவர் பட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.
தற்போது தேசிய திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் தலைவராகவும், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் உபதலைவராகவும் உள்ளார்[3] .
மயில்சாமி அண்ணாதுரை தமிழில் ஆறு நூல்களை எழுதியுள்ளார். அவை:
"கையருகே நிலா" என்ற நூல் 2013ஆம் ஆண்டிற்கான சி. பா. ஆதித்தனார் இலக்கிய விருதை வென்றுள்ளது.
"விண்ணும் மண்ணும்" என்ற நூல் 2021 க்கான மணவை முஸ்தபா அறிவியல் விருதைப் பெற்றுள்ளது.
மயில்சாமி அண்ணாதுரை இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளார்[8]. அவற்றில் சில பரிசுகளும் பட்டங்களும்,
இந்திய அரசு இவருக்கு 2016ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மசிறீ விருதினை வழங்கியது.[14]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)