முரளி | |
---|---|
பிறப்பு | மே 19, 1964 பெங்களூரு, இந்தியா |
இறப்பு | செப்டம்பர் 8, 2010 சென்னை, இந்தியா | (அகவை 46)
தொழில் | நடிகர் |
நடிப்புக் காலம் | 1984 - 2010 |
துணைவர் | ஷோபா |
முரளி (Murali, 19 மே 1964 – 8 செப்டம்பர் 2010) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.[1] கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளிவந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990 இல் வெளிவந்த “புது வசந்தம்”, 1991 இல் வெளிவந்த “இதயம்” படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார்.[2]
முரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர் ஆவார். அவர் பல படங்களைத் தயாரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகாஷ் என்ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். அதர்வா தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார்.
அதர்வா “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளி சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.
இவர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், பிரபுதேவா, சூர்யா, பார்த்திபன், மம்மூட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும் மீனா, சிம்ரன், ரோஜா, தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்துள்ளார்.[1]
இவர் அ.தி.மு.கவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். இக்கட்சிக்காகத் தேர்தலில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரமும் செய்தார்.
எண் | ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1 | 1984 | பிரேம பர்வா | கன்னடம் | ||
2 | பூவிலங்கு | பாண்டியன் | தமிழ் | ||
3 | இங்கேயும் ஒரு கங்கை | காத்தமுத்து | தமிழ் | ||
4 | புதியவன் | மனோகர் | தமிழ் | ||
5 | 1985 | பகல் நிலவு | செல்வம் | தமிழ் | |
6 | கீதாஞ்சலி | ஜேம்ஸ் | தமிழ் | ||
7 | அந்தஸ்து | தமிழ் | |||
8 | அஜேயா | கன்னடம் | |||
9 | இளங்கன்று | தமிழ் | |||
10 | 1986 | புதிர் | தமிழ் | முதல் இரட்டை வேடம் | |
11 | ஒரு மலரின் பயணம் | தமிழ் | |||
12 | மண்ணுக்குள் வைரம் | தமிழ் | |||
13 | காலமெல்லாம் உன் மடியில் | தமிழ் | |||
14 | 1987 | வண்ணக்கனவுகள் | மூர்த்தி | தமிழ் | |
15 | வளையல் சத்தம் | தமிழ் | |||
16 | துளசி | சிவா | தமிழ் | ||
17 | அவள் மெல்ல சிரித்தால் | தமிழ் | |||
18 | மீண்டும் மகான் | தமிழ் | |||
19 | 1988 | புயல் பாடும் பாட்டு | தமிழ் | ||
20 | குடும்பம் ஒரு கோவில் | தமிழ் | |||
21 | தப்புக்கணக்கு | தமிழ் | |||
22 | 1989 | தங்கமணி ரங்கமணி | ரங்கமணி | தமிழ் | |
23 | கைவீசம்மா கைவீசு | தமிழ் | |||
24 | நினைவுச்சின்னம் | தமிழ் | |||
25 | 1990 | புது வசந்தம் | பாலு | தமிழ் | |
26 | பாலம் | தமிழ் | |||
27 | வெற்றிமாலை | தமிழ் | |||
28 | சிலம்பு | தமிழ் | |||
29 | நானும் இந்த ஊருதான் | தமிழ் | |||
30 | நாங்கள் புதியவர்கள் | தமிழ் | |||
31 | சிறையில் சில ராகங்கள் | தமிழ் | |||
32 | புதியக்காற்று | தமிழ் | |||
33 | நம்ம ஊரு பூவாத்தா | தமிழ் | |||
34 | 1991 | சாமி போட்ட முடிச்சு | கதிர்வேலன் | தமிழ் | |
35 | இதயம் | ராஜா | தமிழ் | ||
36 | குறும்புக்காரன் | தமிழ் | |||
37 | இரவுச்சூரியன் | தமிழ் | |||
38 | 1992 | தங்க மனசுக்காரன் | முருகேஷ் (முருகன்) | தமிழ் | |
39 | சின்ன பசங்க நாங்க | முத்துக்காளை | தமிழ் | ||
40 | தங்கராசு | தங்கராசு | தமிழ் | ||
41 | என்றும் அன்புடன் | தமிழ் | |||
42 | தாலி கட்டிய ராசா | தமிழ் | |||
43 | 1993 | மணிக்குயில் | தமிழ் | ||
44 | தங்கக்கிளி | மூர்த்தி | தமிழ் | ||
45 | 1994 | மஞ்சுவிரட்டு | தமிழ் | ||
46 | அதர்மம் | தமிழ் | |||
47 | என் ஆசை மச்சான் | சுப்ரமணி | தமிழ் | ||
48 | சத்யவான் | தமிழ் | |||
49 | 1995 | ஆகாயப் பூக்கள் | தமிழ் | ||
50 | தொண்டன் | தமிழ் | |||
51 | 1996 | பூவே உனக்காக | அவராகவே | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
52 | பூமணி | தமிழ் | |||
53 | 1997 | காலமெல்லாம் காதல் வாழ்க | தமிழ் | ||
54 | பொற்காலம் | மாணிக்கம் | தமிழ் | ||
55 | ரோஜா மலரே | கண்ணன் | தமிழ் | ||
56 | 1998 | காதலே நிம்மதி | மோகன் | தமிழ் | |
57 | தினம்தோறும் | தமிழ் | |||
58 | வீரத்தாலாட்டு | தமிழ் | |||
59 | ரத்னா | ரத்னா, முத்துவேல் | தமிழ் | ||
60 | பூந்தோட்டம் | தமிழ் | |||
61 | என் ஆச ராசாவே | தமிழ் | |||
62 | உன்னுடன் | சந்தோஷ் | தமிழ் | ||
63 | தேசியகீதம் | தமிழ் | |||
64 | 1999 | கனவே கலையாதே | ஆனந்த் | தமிழ் | |
65 | ஊட்டி | பாலு | தமிழ் | ||
66 | பூவாசம் | தமிழ் | |||
67 | இரணியன் | இரணியன் | தமிழ் | ||
68 | 2000 | வெற்றிக் கொடி கட்டு | சேகர் | தமிழ் | |
69 | மனுநீதி | முரளி | தர்மா | ||
70 | 2001 | கண்ணுக்கு கண்ணாக | தர்மா | தமிழ் | |
71 | சொன்னால் தான் காதலா | முரளி | தமிழ் | ||
72 | ஆனந்தம் | மாதவன் | தமிழ் | ||
73 | சமுத்திரம் | தங்கராசு | தமிழ் | ||
74 | அள்ளித்தந்த வானம் | மாதவன் | தமிழ் | ||
75 | கடல் பூக்கள் | கருத்தையா | தமிழ் | சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது | |
76 | 2002 | சுந்தரா டிராவல்ஸ் | கோபிகிருஷ்ணா | தமிழ் | |
77 | காமராசு | காமராசு | தமிழ் | ||
78 | நம்ம வீட்டு கல்யாணம் | ரவி | தமிழ் | ||
79 | 2003 | காதலுடன் | கல்யா | தமிழ் | |
80 | 2004 | அறிவுமணி | அறிவுமணி | தமிழ் | |
81 | 2006 | பாசக்கிளிகள் | செவத்தய்யா | தமிழ் | |
82 | 2009 | எங்கள் ராசி நல்ல ராசி | விஜய் | தமிழ் | |
83 | நீ உன்னை அறிந்தால் | கோபால் | தமிழ் | ||
84 | 2010 | பாணா காத்தாடி | 'இதயம்' ராஜா | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
இவர் 46 வது வயதில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்.[3]