தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | மொகமது அஷ்ரஃபுல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை கழல் திருப்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 17) | செப்டம்பர் 6 2001 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சூன் 6 2010 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 51) | ஏப்ரல் 11 2001 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | திசம்பர் 1 2010 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2001–இன்று | டாக்கா அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2000–2001 | டாக்கா மெட்ரோபொலி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–இன்று | மொகம்மதீன் விளையாட்டுக்கழகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009 | மும்பாய் இந்தியன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் கிரிக்கெட் ஆக்கைவ்.com, பிப்ரவரி 4 2011 |
மொகமது அஷ்ரஃபுல் (Mohammad Ashraful, (வங்காள மொழி: মোহাম্মদ আশরাফুল) பிறப்பு: சூலை 7 1984) வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரராவார், இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார் . வங்காளதேசத்தில் டாக்கா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, ஆசிய லெவன் அணி, டாக்கா அணி, டாக்கா மெட்ரோபொலி, மொகம்மதீன் விளையாட்டுக்கழகம், மும்பாய் இந்தியன்ஸ் அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார். இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் தலைவராக செயலாற்றி உள்ளார்.
2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை இஅர் 13 தேர்வுத் துடுப்பாட்டம் மற்ரும் 38 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்குத் தலைவராக செயல்பட்டார். இதில் 8 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரின் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விரைவாக அரைநூறு அடித்தவர்களின் வரிசையில் முதல் இடத்தில் உள்ளார்..[2][3][4] தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் அடித்தவர்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.[5][6]
இவர் சர்வதேச போட்டிகளில் விளையாடாத போது இவர் தாகா துடுப்பாட்ட அணிக்காக உள்லூர்ப் போட்டிகளில் ஒருநாள் போட்டிகளிலும் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடினார். இந்த இரண்டு தொடர்களிலும் இவர் தலைவராக செயல்பட்டார். 2014 ஆம் ஆண்டில் இவர் சூதாட்டப் ப்காரில் சிக்கியதால் இவர் 8 ஆண்டுகள் விளையாட வங்காளதேசத் துடுப்பாட்ட வாரியம் தடை விதித்தது. பின் இந்தத் தடையானது 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.[7]
2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கோபையில் விளையாடிய வங்காளதேசத் துடுப்பாட்ட அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.செப்டம்பர் 6 இல் கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 53 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்து முத்தையா முரளிதரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 63 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 212 பந்துகளில் 114 ஓட்டங்கள் எடுத்து பெராராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் அறிமுகப் போட்டியிலேயே இவர் நூறு ஓட்டங்கள் அடித்தார்.இந்தப் போட்டியில் இலங்கை அணி 137 ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆட்டப் பகுதி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருந்தபோதிலும் அஷ்ரபுலிந்தப் போட்டிக்கான ஆட்டநாயகனாகத் தேர்வானார்.[8]
2013 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . ஏப்ரல் 25 , இல் ஹராரேவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 20 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து மசகட்சா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 2 ஓவர்களையும் மெய்டனாக வீசினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 8 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து ஜார்வீசின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 7 ஓவர்கள் வீசி 13 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசி 1 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் வங்காளதேச அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[9]
2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடரில் இவர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தத் தவறினார். அந்தத் தொடரில் இவர் 71 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். அதன் மட்டையாட்ட சராசரி 14.20 ஆகும். அந்தத் தொடரில் வங்காளதேச அணி பிரிவு ஆட்டங்களுடன் வெளியேறியது.
2004 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . அந்த சமயத்தில் சிம்பாப்வே அணியின் அனுபவ வீரர்கள் பலர் ஓய்வில் இருந்தனர். ஆனாலும் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரினை சிம்பாப்வே அணி 1-0 எனும் கணக்கில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரினை 2-1 எனும் கணக்கில் வெற்றி பெற்றது.[10] இந்தத் தொடரில் ஈவர்கள் பெற்ற ஒரு வெற்றியானது, 1999 ஆம் அண்டில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போடியில் பெற்ற வெற்றியினை அடுத்து இவர்கள் பெற்ற வெற்றி இதுவாகும். இதில் அஸ்ரபுல் 32 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்திருந்தார். மேலும் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார்.[11] அதே ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . அந்தத் தொடரில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 158 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக வங்காளதேசத் துடுப்பாட்ட வீரர் எடுத்த அதிக பட்ச ஓட்டம் எனும் சாதனை படைத்தார்.[12] தனது வாழ்க்கையின் மிகச் சிறந்த போட்டிகளில் இதுவும் ஒன்று என இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.[13]
2005 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. மேலும் இங்கிலாந்து , வங்காளதேசம் மற்றும் ஆத்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரிலும் விளையாடியது. ஆறு போட்டிகள் கொண்ட தொடரில் வங்காளதேச அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. இந்தப் போட்டியினை விசுடன் நாட்குறிப்பில் ஆத்திரேலிய அணியின் பெரிய ஏமாற்றம் எனத் தெரிவித்தது.[14] அந்தப் போட்டியில் இவர் 100 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். மேலும் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். மேலும் இரு ஐமது ஓட்டங்களையும் எடுத்து மொத்தமாக 259 ஓட்டங்களை எடுத்தார். அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் வரிசையில் மூன்றாம் இடம் பெற்றார்.[15]
தலைவராக இவரின் செயல்பாடு | |||||
---|---|---|---|---|---|
போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமன் | ||
தேர்வு[16] | 13 | 0 | 12 | 1 | |
ஒ பது[17] | 38 | 8 | 30 | – | |
ப இ20[18] | 11 | 2 | 9 | – |
இலங்கைத் துடுப்பாட்ட அனிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் தலைவராக நியமனம் ஆனார். 2006 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் சிட்டகொங் மாகாண அரங்கத்தில் முதல் போட்டி நடந்தது.[19] முதல் ஆட்டப் பகுதியில் 136 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.[20] இது இவரின் மூன்றாவது தேர்வு நூறாகும். ஆனால் அந்தப் போட்டியில் வங்காளதேச அணி தோற்றது. இரண்டாவது போட்டியிலும் பத்து இலக்குகளில் தோல்வியடைந்தது. அஸ்ரபுல் 37 ஓட்டங்களும் மகிளே ஜெயவர்த்தனாவின் இலக்கினையும் வீழ்த்தினார்.[21]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)