வடக்கு கிழக்கு மாகாண சபை

வடக்கு கிழக்கு மாகாணம்
1988–2007
 

{{{common_name}}} கொடி {{{common_name}}} சின்னம்
கொடி சின்னம்
வடக்கு கிழக்கு மாகாணதின் அமைவிடம்
வடக்கு கிழக்கு மாகாணதின் அமைவிடம்
வடக்கு கிழக்கு மாகாணத்தின் அமைவிடம்
தலைநகரம் திருகோணமலை
மாவட்டங்கள் 8 மாவட்டங்கள்
யாழ்ப்பாணம் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், மன்னார் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம், திருகோணமலை மாவட்டம், அம்பாறை மாவட்டம்
மக்கள்தொகை
 - மக்களடர்த்தி
வடக்கு, கிழக்கு மாகாண கட்டுரைகளைப் பார்க்கவும்.
பரப்பளவு
 -  மொத்தம் 18,880 ச.கி.மீ (7,289.6 ச.மை)
 -  நீர் (%) 6.14
வலைத்தளம் மாகாணசபைகள்

வடக்கு கிழக்கு மாகாணசபை என்பது இலங்கையின் முன்னாள் அரசியல் நிர்வாக அலகுகளுள் ஒன்றாகும். இது இலங்கையின் மாகாண அலகுகளாக இருந்த வட்டக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை நிர்வகிப்பதற்காக கொண்டுவரப்பட்ட நிர்வாக சபையாகும். இது 1987 ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1988 இல் நடைபெற்ற மாகாணசபைக்கான பொதுத்தேர்தலைத்தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது.[1][2][3]

தற்போது இலங்கையின் ஆரசியல் மாற்றங்களால், இம்மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறுவதில்லை. தேரதல்கள் இன்றி ஆளுநருக்கு கீழான, மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இது கொண்டுவரப்பட்டுள்ளது. இம்மாகாணசபைகள் இப்போது கொழும்பு மேல் நீதிமன்ற உத்தரவிற்கமைய பிரிக்கப்பட்டு வடக்கு மாகாணசபையானது கன்னியாப் பகுதியில் இயங்கிவருகின்றது, திருகோணமலையில் உள்ள இரண்டு மாகாணசபைகளும் வெவ்வெறிடத்தில் இருப்பதால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

வடகிழக்கு இணைப்பு ரத்து தீர்ப்பு

[தொகு]

1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைய, ஒன்றாக்கப்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் செல்லுபடியாகாது என இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. அந்தத் தீர்ப்பு வடகிழக்கு இணைப்பை ரத்து செய்கின்றது. "வடக்கு கிழக்கின் இணைப்பானது கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதாகக் கூறித் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள இத் தீர்ப்பில், கிழக்கு மாகாணத்துக்குத் தனியானதொரு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது." [1]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Department of Census & Statistics Statistical Abstract 2007 (Area & Climate) பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2009 at the வந்தவழி இயந்திரம்
  2. "North-East merger illegal:SC". LankaNewspapers.com. 17 October 2006. பார்க்கப்பட்ட நாள் 22 August 2009.
  3. "Indo Sri Lanka Agreement, 1987". Tamil Nation. பார்க்கப்பட்ட நாள் 22 August 2009. [தொடர்பிழந்த இணைப்பு]