இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வகை | வீடியோகான் குழுமத்தின் துணைநிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2009 |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் | அனில் கேரா |
தொழில்துறை | செய்மதித் தொலைக்காட்சி |
உற்பத்திகள் | தொலைக்காட்சி அணுக்கப் பெட்டி, உயர் வரையறு எண்ணிம அணுக்கப் பெட்டி, உயர் வரையறு எண்ணிம ஒளித பதிவுக்கருவி, விண்ணின்று வீடு சேவை, கட்டணத் தொலைக்காட்சி, காட்சிக்குக் கட்டணம் |
தாய் நிறுவனம் | வீடியோகான் குழுமம் |
இணையத்தளம் | www |
வீடியோகான் டி2எச் (Videocon d2h) இந்தியாவின் பெரும் கட்டணத் தொலைக்காட்சி சேவையாளர்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் விண்ணின்று வீடு சேவைகளை வழங்கி வருகிறது. எம்பெக்-4 எண்ணிம சுருக்கத் தொழினுட்பத்தையும் எண்ணிமத் தொலைக்காட்சி பரப்புகை S2 தொழினுட்பத்தையும் பயன்படுத்தி தனது அலைவரிசைத் தொகுப்பை வழங்கி வருகிறது. 2009ஆம் ஆண்டு ஆகத்தில் தொடங்கிய இச்சேவை தனது தனித்தன்மையாக தனது சேவைக்கு அணுக்கம் தரும் செட் டாப் பாக்சை ஒருங்கிணைத்த படிகநீர்மைத்திரை தொலைக்காட்சிப் பெட்டிகளை விற்பனைக்கு வழங்கியது.
நவம்பர் 2012இல் இதன் சந்தாதாரர்கள் 7.5 மில்லியனாக இருந்தனர்.