தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | உமர் அக்மல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, செப்டெம்பர் 12 2010 |
உமர் அக்மல் Umar Akmal உருது: عمر اکمل பிறப்பு 26 மே, 1990) என்பவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். 2009 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] வலதுகை மட்டையாளாரான இவர் அவ்வப்போது பந்துவீச்சாளராகவும் செயல்படுகிரார். இவரின் சகோதரர்களான அட்னான் அக்மல் மற்றும் காம்ரான் அக்மல் ஆகியோரும் பாக்கித்தான் தேசியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளனர். இவர் நூர் பாத்திமா என்பவரைத் திருமணம் செய்தார். இவர் பார்படோசு டிரிடன்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், லாகூர் லயன்ஸ், லாகூர் கலாந்தர்ஸ், டிரிபான்கோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிக்களுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான பாக்கித்தான் அணியில் இவர் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார். 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் பாக்கித்தான் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2009 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 24 இல் துனதினில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 160 பந்துகளில் 129 ஓட்டங்கள் எடுத்து பாண்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 21 நான்குகளும்,2 ஆறுகளும் அடங்கும். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 174 பந்துகளில் 75 ஓட்டங்கள் எடுத்து பாண்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் . இதில் 5 நான்குகளும்1 ஆறுகளும் அடங்கும். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]
2011 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. செப்டம்பர் 1 இல் புலவாயோவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒரே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 39 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்து லேம்ப்பின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 2 நான்குகள் அடங்கும். இரண்டாவது ஆட்டப் பகுதியில் இவருக்கு துடுப்பாட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3]
ஆகஸ்டு 1, 2009 இல் தம்புலாவில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியில் 28 பந்துகளில்18 ஓட்டங்களை எடுத்து மேத்தியூசின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.[4]
2009 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து பன்னாட்டு இருபது20 போட்டித் தொடரில் விளையாடியது. ஆகஸ்டு 12 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 30 ஓட்டங்களை எடுத்து அஞ்செலோ மத்தியூசின் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5]