குடியரசுத் தலைவர் நிலையம்

குடியரசுத்தலைவர் நிலையம்
Map
பொதுவான தகவல்கள்
வகைஅதிகாரப்பூர்வ ஓய்வு இல்லம்
கட்டிடக்கலை பாணிஐரோப்பிய
இடம்செக்கந்திராபாத்
நிறைவுற்றது1860

குடியரசுத் தலைவர் நிலையம் என்பது இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரப் பூர்வ ஓய்வு இல்லம் ஆகும்.[1] இது ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் செகந்திராபாத்தில் உள்ள பொல்லாரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

1860 ஆம் ஆண்டு ஐதராபாத்தின் ஐந்தாம் நிசாம் நாசிர்-உத்-தௌலாவால் கட்டப்பட்ட இல்லமாகும்.[2] 1948 ஆம் ஆண்டில் ஐதராபாத் போலோ நடவடிக்கையின் வாயிலாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டவுடன் இது குடியரசுத்தலைவரின் தென்னகத் தற்காலிகத் தங்குமிடமாய்ப் பயன்பாட்டில் உள்ளது.[3]

இல்லம்

[தொகு]

90 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள இந்த இல்லம் 16 அறைகளை உடையது. அரசவை, திரைப்பட அறை, உணவுப் பந்தியறை உள்ளிட்ட அறைகள் இல்லத்தில் அமைந்துள்ளன.

மூலிகைத் தோட்டம்

[தொகு]

திசம்பர் 2009 இல் 7000 சதுரமீட்டர் பரப்பில் மூலிகைத் தோட்டம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டது. சந்தனம், துளசி, சர்ப்பகந்தா உள்ளிட்ட 116 மூலிகை மற்றும் நறுமணச் செடிகள் இங்கு பேணப்படுகின்றன.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cities / Hyderabad : Rashtrapati Nilayam bags first prize in Garden Festival 2010". The Hindu. 2010-02-05. பார்க்கப்பட்ட நாள் 2012-10-10.
  2. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/R-P-Nilayam-to-be-thrown-open-to-public-from-Jan-6-12/articleshow/17878489.cms
  3. "President Patil arriving Hyderabad on 15-day southern sojourn | TopNews". Topnews.in. 2008-12-27. பார்க்கப்பட்ட நாள் 2012-10-10.