வகை | தினசரி நாளிதழ் |
---|---|
வடிவம் | பத்திரிகை, இணையத்தளம் |
நிறுவியது | 1951 |
மொழி | தமிழ் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
இணையத்தளம் | http://www.dinamalar.com |
தினமலர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும். இந்நாளிதழ் டி. வி. இராமசுப்பையர் என்பவரால் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள் தொடங்கப்பட்டது[1][2].
சென்னை, புதுச்சேரி, வேலூர், கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோயில் ஆகிய இடங்களில் இதன் பதிப்புகள் வெளிவருகின்றன[3] .
தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் முதல் இரண்டு நாளிதழ்களில் இதுவும் ஒன்று.[சான்று தேவை]
தேதி | நிகழ்வு |
---|---|
செப்டம்பர் 9, 1951 | தினமலர் தொடக்கம். திருவனந்தபுரத்தில் முதல் பதிப்பு. |
ஏப்ரல் 16, 1957 | திருவனந்தபுரத்திலிருந்து நெல்லைக்கு பதிப்பு மாற்றம் |
டிசம்பர் 15, 1966 | திருச்சி பதிப்பு தொடக்கம் |
ஏப்ரல் 29, 1979 | சென்னை பதிப்பு தொடக்கம். |
டிசம்பர் 26, 1980 | மதுரை பதிப்பு தொடக்கம் |
ஏப்ரல் 4, 1982 | வாரமலர் தொடக்கம் |
மார்ச் 16, 1984 | ஈரோடு பதிப்பு தொடக்கம் |
நவம்பர் 22, 1985 | சிறுவர்மலர் தொடக்கம் |
அக்டோபர் 19, 1988 | கதைமலர் தொடக்கம் |
ஏப்ரல் 15, 1991 | புதுச்சேரி பதிப்பு தொடக்கம் |
டிசம்பர் 23, 1992 | கோவை பதிப்பு தொடக்கம் |
டிசம்பர் 13, 1993 | வேலூர் பதிப்பு தொடக்கம் |
ஜனவரி 13, 1994 | வேலைவாய்ப்புக் கல்விமலர் தொடக்கம் |
தினமலர் நாளிதழில் தினம் இடம் பெறுகின்ற பகுதிகள்.
தினமலர் நாளிதழுடன் இலவச இணைப்புகளாக புத்தகங்களும், வரிவிளம்பரம் போன்ற பகுதிகளும் கொடுக்கப்படுகின்றன.
தினமலர் கோவில்கள் பகுதியில் பகவத் கீதை, மாவட்ட கோவில்கள், 12 திருமுறைகள், முக்கிய ஊர்களில் உள்ள கோவில்கள், 108 திவ்ய தேசம், 274-சிவாலயம், விஷ்ணு கோவில், சிவன் கோவில்,12 ஜோதிர் லிங்கம், விநாயகர் கோவில், அம்மன் கோவில், சக்தி பீடங்கள், முருகன் கோவில், அறுபடைவீடு, நவக்கிரக கோவில், 27 நட்சத்திர கோவில், பிற கோவில், தனியார் கோவில், கோவில் முகவரிகள், வெளி மாநில கோவில்,வெளிநாட்டு கோவில், சிறப்பு வீடியோ, ஐயப்ப தரிசனம், வழிபாடு, காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள் போன்றவை உள்ளன.
தினமலர் மொபைல் நாளிதழ் என்பது தினமலர் நாளிதழ் வழங்கும் நகர்பேசி சேவையாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு இச்சேவை துவங்கப்பட்டது. . இந்த சேவையை பெறுவதற்கு ஜி.பி.ஆர்.எஸ்., வசதி உடைய நகர்பேசி தேவை. இந்த சேவையை நியூஸ்ஹன்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து தினமலர் வழங்குகிறது .