தினேஸ் சந்திமல்

தினேஸ் சந்திமல்
Dinesh Chandimal
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லொக்குகே தினேஷ் சண்டிமல்
பிறப்பு18 நவம்பர் 1989 (1989-11-18) (அகவை 35)
பலப்பிட்டி, இலங்கை
பட்டப்பெயர்சண்டி
உயரம்5 அடி 11 அங் (1.80 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர்ச்சுழல்
பங்குதுடுப்பாட்டம், குச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 122)26 திசம்பர் 2011 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு27 சனவரி 2020 எ. சிம்பாப்வே
ஒநாப அறிமுகம் (தொப்பி 144)1 சூன் 2010 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாப5 சனவரி 2019 எ. நியூசிலாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 33)30 ஏப்ரல் 2010 எ. நியூசிலாந்து
கடைசி இ20ப27 அக்டோபர் 2018 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2019-இன்றுஇலங்கைத் தரைப்படை
2009-2019நொண்டச்கிரிப்ட்சு அணி
2012ருகுண ரைனோசு (squad no. 17)
2012ராஜஸ்தான் ராயல்ஸ்
2017சிட்டாகொங் வைக்கிங்க்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா இ20ப மு.த
ஆட்டங்கள் 57 146 54 121
ஓட்டங்கள் 3,877 3,599 800 8,877
மட்டையாட்ட சராசரி 40.81 32.42 18.60 47.98
100கள்/50கள் 11/18 4/22 0/4 25/41
அதியுயர் ஓட்டம் 164* 111 58 354*
வீசிய பந்துகள் 36
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 18.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
77/10 59/7 32/5 169/24
மூலம்: ESPNcricinfo, 29 ஆகத்து 2020

லொகுகே தினேஸ் சந்திமல் (Lokuge Dinesh Chandimal, சிங்களம்: දිනේෂ් චන්දිමාල් பிறப்பு: நவம்பர் 18, 1989), இலங்கைத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்ட வீரரும், இலங்கை அணிகளின் முன்னாள் தலைவரும் ஆவார்.[1][2] இலங்கையின் தென் மாகாணத்தில் இவர் பலப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வலது கை மட்டையாளரான இவர் இலங்கை அணி விளையாடிய முதல் பகல் இரவு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் தலைவராக இருந்தார். இலங்கை அணியின் குச்சக்காப்பாளராகவும் விளையாடி வருகிறார்.

2012 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்குச் செல்வதிலும், 2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் கோப்பை வெல்வதிலும் முக்கியக் காரணமாக இருந்தார். முதலில் இவர்தான் 2014 ஆம் ஆண்டின் இருபது 20 போட்டியைத் தலைமை தாங்கினார். ஆனால் மெதுவாக பந்துவீசியதால் இவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.[3]

2019 செப்டம்பர் 26 இல், இவர் இலங்கைத் தரைப்படை சேவையில் இணைந்து இலங்கை இராணுவ விளையாட்டு அணியில் விளையாடினார்.[4][5] 2020 ஆகத்தில், இலங்கை இராணுவ அணிக்காக சரசென்ஸ் ஸ்போட்ஸ் கழக அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி இலங்கையின் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 354 ஓட்டங்களைப் பெற்று சாதனை புரிந்தார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

டிசம்பர் 26, 2004 இல் இவரின் இல்லம் 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையால் அழிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 14 ஆகும்.[7] இவர் தனது நீண்ட நாள் தோழியான இஷிகா ஜெயசேகரா என்பவரை மே 1, 2015 இல் கொழும்பில் திருமணம் செய்தார்.[8][9][10]

சர்வதேச போட்டிகள்

[தொகு]

2010 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். தொடரின் துவக்கத்தில் இவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராகவும் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராகவும் விளையாடினார். பின் சூப்பர் எய்ட் சுற்றில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடினார்.

புளோரிடாவில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக இந்தியா, சிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய மூன்றுநாடுகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்தத் தொடரில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 118 பந்துகளில் 111 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் மிக குறைந்த வயதில்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் நூறு ஓட்டங்கள் எடுத்த இலங்கைத் துடுப்பாட்ட வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் 6 இலக்குகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று இந்திய அணியை தொடரில் இருந்து வெளியேற்றியது.

டிசம்பர், 2011 ஆம் ஆண்டில் டர்பனில் நடைபெற்ற தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரின் இரண்டாவதுபோட்டியில் இவர் அரிமுகமானார். இவரின் முதல்போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 58 ஓட்டங்களும், இரண்டாவது ஆட்டப்பகுதியில் 54 ஓட்டங்களும் எடுத்தார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் இரு ஆட்டப்பகுதியிலும் 50 ஓட்டங்கள் எடுத்த முதல் இலங்கை வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் தென்னாப்பிரிக்காவில் இலங்கை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்ய உதவினார்.[11]

பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக இலக்குகளை கேட்ச் பிடித்த 6 ஆவது சர்வதேச வீரர் மற்றும் முதல் இலங்கை வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்குமுன் டாரென் சமி, அஜின்கியா ரகானே,பீட்டர் போரன், கோரி ஆன்டர்சன் மற்றும் பாபர் ஹயாத் ஆகியோர் இந்தச் சாதனை புரிந்துள்ளனர்.[12]

சான்றுகள்

[தொகு]
  1. "Chandimal to lead SL in Tests, Tharanga in shorter formats". ESPNcricinfo. Retrieved 11 July 2017.
  2. "Chandimal replaces Mathews as Sri Lanka ODI captain". International Cricket Council. Retrieved 23 September 2018.
  3. "Chandimal suspended for one match". ESPNcricinfo. 28 March 2014. Retrieved 2 February 2016.
  4. "Dinesh Chandimal to join Sri Lankan Army as commissioned officer". www.adaderana.lk. Retrieved 26 September 2019.
  5. "Dinesh Chandimal joins SL Army today - Sri Lanka Latest News". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2019-09-26. Retrieved 26 September 2019.
  6. "Former Sri Lanka Captain Dinesh Chandimal Scores Unbeaten 354". Cricket Addictor. Retrieved 27 August 2020.
  7. S; confession, akalumTo start with a; Q, I. am not a writer But I. enjoy sharing information in the Internet I. have been part of the Lanka Help; site, A.; comments, Lanka Help Magazine from the beginning It is always happy to get your; feedbacks.... "Lesser Known Facts about Dinesh Chandimal - Lanka Help Magazine". Archived from the original on 16 ஜூலை 2017. Retrieved 12 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "දිනේෂ් චන්දිමාල් යුගදිවියට - Photos - Hiru Gossip". Retrieved 12 June 2017.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-18. Retrieved 2018-05-21.
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-23. Retrieved 2018-05-21.
  11. "Sri Lanka tour of South Africa, 2nd Test: South Africa v Sri Lanka at Durban, Dec 26–30, 2011". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. Retrieved 28 December 2011.
  12. "Records | Twenty20 Internationals | Fielding records | Most catches in an innings | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/slc-twenty20-15/content/records/283641.html. 

வெளி இணைப்புகள்

[தொகு]