தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஹேரத் முதியாசிலாகே ரங்கன கீர்த்தி பண்டார ஹேரத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 19 மார்ச்சு 1978 குருணாகல், இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 5 அங் (1.65 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடதுகை மரபுவழா சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 78) | 22 செப்டம்பர் 1999 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 6 நவம்பர் 2018 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 120) | 25 ஏப்ரல் 2004 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 1 மார்ச் 2015 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 14 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 39) | 6 ஆகத்து 2011 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 28 மார்ச் 2016 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1996–1998 | குருணாகலை இளைஞர் துடுப்பாட்டக் கழகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1998–2010 | மூவர்சு விளையாட்டுக் கழகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2011 | வயம்பா துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009 | சரே துடுப்பாட்டக் கழகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2010 | ஆம்ப்சயர் துடுப்பாட்டக் கழகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–இன்று | தமிழ் யூனியன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012 | பசுனாகிரா துடுப்பாட்டம் டண்டீ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNCricinfo, நவம்பர் 13 2018 |
ரங்கன ஹேரத் (Rangana Herath, பிறப்பு: மார்ச் 19, 1978) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இடதுகை சுழல் பந்து வீச்சாளர் ஆவார். 2004 ஆம் ஆண்டு அராரேயில் நடந்த சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதனூடாக பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானர். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, குருணாகலை இளம் துடுப்பாட்ட அணி, முவர்ஸ் அணி, தமிழ் யூனியன் அணி, வயாம்பா துடுப்பாட்ட அணி ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளார். இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடினார்.
துடுப்பாட்டத்தில் மிகச்சிறந்த இடக்கைப் பந்து வீச்சாளர்களில் ஒருவராகப் புகழப்படும் ரங்கன ஹேரத் தேர்வுத் துடுப்பாட்ட இடக்கை சுழற்திருப்ப பந்துவீச்சாளர்களில் சிறந்த உலக சாதனையை இவர் கொண்டுள்ளார். 2016 மே 29 இல், முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ் ஆகியோருக்கு அடுத்ததாக 300 தேர்வு இலக்குகளைக் கைப்பற்றிய மூன்றாவது இலங்கை வீரர் என்ற சாதனையை எட்டினார்..[1]
டிசம்பர் 23,2016 இல் சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு ஹெராத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2] இதன்மூலம் அதிக வயதில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தலைமை தாங்கிய இலங்கை வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன் டொம் கிரவெனி தலைமை தாங்கியதே சாதனையாக இருந்தது.[3]
ஹெராத் 1999 ஆம் ஆண்டில் காலி பன்னாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமனார். பின் 2004 ஆம் ஆண்டில் ஹராரே துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். 2012 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி பந்து வீச்சாளர் தரவரிசையில் இவர் எட்டாவது இடம் பிடித்தார்.[4]
இவர் 1999 ஆம் ஆண்டிலேயே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானாலும் முதன்மைப் பந்துவீச்சாளராக ஆகவில்லை. ஏனெனில் முத்தையா முரளிதரன் அணியின் முதன்மைப் பந்துவீச்சாளராக இருந்தார். பின் இவரின் ஓய்விற்குப் பிறகே இவருக்கு நிலையான இடம் கிடைத்தது.[5]
2015 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் இவர் 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இவர் எடுக்கும் முதல் 5 இலக்காகும் ஒட்டுமொத்தமாக 23 ஆவது முறையாகும். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 68 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றி அந்த அணியை 251 ஓட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்தனர். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 79 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி ஒரு ஆட்டப் பகுதி மற்றும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 4 இலக்குகளைக் கைப்பற்றி இந்தத் தொடரை 2-0 என்று கைப்பற்ற உதவினார்.[6]
2014 ஆம் ஆண்டில் வங்காளதேசத்தில் நடைபெற்ற 2014 ஐசிசி உலக இருபது20 போட்டியில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். மார்ச் 31 இல் நடைபெற்ற இந்தப் போட்டியில் 119 ஓட்டங்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தது.[7] 120 வெற்றி இலக்காக வலிமை வாய்ந்த நியூசிலாந்து அணியில் பிரண்டன் மெக்கல்லம், மார்டின் கப்தில்,ராஸ் டைலர் ஆகியோர் இந்த அணியில் இருந்தனர். ஆண்டர்சன் காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து விலகியதால் 10 வீரர்களோடு விளையாடினர். இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 3 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.[8]
# | தரவுகள் | ஆட்டம் | எதிராக | அரங்கு | நகரம் | நாடு | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|
1 | 12/171 | 36 | இங்கிலாந்து | காலி பன்னாட்டு அரங்கம் | காலி | இலங்கை | 2012 |
2 | 11/108 | 41 | நியூசிலாந்து | காலி பன்னாட்டு அரங்கம் | காலி | இலங்கை | 2012 |
3 | 12/157 | 47 | வங்காளதேசம் | ஆர். பிரேமதாச அரங்கம் | கொழும்பு | இலங்கை | 2013 |
4 | 14/184 | 57 | பாக்கித்தான் | சிங்களவர் அரங்கு | கொழும்பு | இலங்கை | 2014 |
5 | 10/147 | 64 | மேற்கிந்தியத் தீவுகள் | காலி பன்னாட்டு அரங்கம் | காலி | இலங்கை | 2015 |
6 | 13/135 | 73 | ஆத்திரேலியா | சிங்களவர் அரங்கு | கொழும்பு | இலங்கை | 2016 |
# | தரவுகள் | ஆட்டம் | எதிராக | அரங்கு | நகரம் | நாடு | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|
1 | 5/99 | 16 | பாக்கித்தான் | பி.சரா அரங்கு | கொழும்பு | இலங்கை | 2009 |
2 | 5/157 | 17 | பாக்கித்தான் | சிங்களவர் அரங்கு | கொழும்பு | இலங்கை | 2009 |
3 | 5/139 | 18 | நியூசிலாந்து | சிங்களவர் அரங்கு | கொழும்பு | இலங்கை | 2009 |
4 | 5/121 | 20 | இந்தியா | கிறீன் பூங்கா | கான்பூர் | இந்தியா | 2009 |
5 | 5/79 | 28 | ஆத்திரேலியா | காலி பன்னாட்டு அரங்கம் | காலி | இலங்கை | 2011 |
6 | 7/157 | 29 | ஆத்திரேலியா | சிங்களவர் அரங்கு | கொழும்பு | இலங்கை | 2011 |
7 | 5/79 | 34 | தென்னாப்பிரிக்கா | கிங்க்சுமீட் | டர்பன் | தென்னாப்பிரிக்கா | 2011 |
8 | 6/74 | 36 | இங்கிலாந்து | காலி பன்னாட்டு அரங்கம் | காலி | இலங்கை | 2012 |
9 | 6/97 | 36 | இங்கிலாந்து | காலி பன்னாட்டு அரங்கம் | காலி | இலங்கை | 2012 |
10 | 6/133 | 37 | இங்கிலாந்து | பி.சரா ஓவல் | கொழும்பு | இலங்கை | 2012 |
11 | 5/65 | 41 | நியூசிலாந்து | காலி பன்னாட்டு அரங்கம் | காலி | இலங்கை | 2012 |
12 | 6/43 | 41 | நியூசிலாந்து | காலி பன்னாட்டு அரங்கம் | காலி | இலங்கை | 2012 |
13 | 6/103 | 42 | நியூசிலாந்து | பி.சரா ஓவல் | கொழும்பு | இலங்கை | 2012 |
14 | 5/95 | 43 | ஆத்திரேலியா | பெல்லரைவ் ஓவல் அரங்கம் | ஹோபார்ட் | ஆத்திரேலியா | 2012 |
15 | 5/68 | 47 | வங்காளதேசம் | பிரேமதாசா அரங்கு | கொழும்பு | இலங்கை | 2013 |
16 | 7/89 | 47 | வங்காளதேசம் | பிரேமதாசா அரங்கு | கொழும்பு | இலங்கை | 2013 |
17 | 5/125 | 50 | பாக்கித்தான் | சார்ஜா அரங்கு | சார்ஜா | அமீரகம் | 2014 |
18 | 5/40 | 55 | தென்னாப்பிரிக்கா | சிங்களவர் அரங்கு | கொழும்பு | இலங்கை | 2014 |
19 | 6/48 | 56 | பாக்கித்தான் | காலி பன்னாட்டு அரங்கம் | காலி | இலங்கை | 2014 |
20 | 9/127 | 57 | பாக்கித்தான் | சிங்களவர் அரங்கு | கொழும்பு | இலங்கை | 2014 |
21 | 5/57 | 57 | பாக்கித்தான் | சிங்களவர் அரங்கு | கொழும்பு | இலங்கை | 2014 |
22 | 7/48 | 61 | இந்தியா | காலி பன்னாட்டு அரங்கம் | காலி | இலங்கை | 2015 |
23 | 6/68 | 64 | மேற்கிந்தியத் தீவுகள் | காலி பன்னாட்டு அரங்கம் | காலி | இலங்கை | 2015 |
24 | 5/54 | 71 | ஆத்திரேலியா | முரளிதரன் அரங்கு | கண்டி | இலங்கை | 2016 |
25 | 6/81 | 73 | ஆத்திரேலியா | சிங்களவர் அரங்கு | கொழும்பு | இலங்கை | 2016 |
26 | 7/64 | 73 | ஆத்திரேலியா | சிங்களவர் அரங்கு | கொழும்பு | இலங்கை | 2016 |
# | தரவுகள் | ஆட்டம் | எதிராக | அரங்கு | நகரம் | நாடு | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|
1 | 5/3 | 7 | நியூசிலாந்து | சாக் அரங்கு | சிட்டகொங் | வங்காளதேசம் | 2014 |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
(help)