இந்தியக் குடியரசு |
---|
இந்திய அரசு வலைவாசல் |
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர், இந்தியாவின் தேர்தல்களை நேர்மையாக, விருப்புவெறுப்பின்றி, எவ்வமைப்பையும் சாராமல் நடத்துவதற்கு வழிவகை செய்பவர்.
இந்தியக் குடியரசுத் தலைவரால் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 6 ஆண்டுகள் அல்லது 65 அகவை (வயது) நிறைவுறும் வரை எது முன் நிகழ்கின்றதோ அதைப் பொருத்து இவர்கள் பணிக்காலம் கணக்கிடப்படுகின்றது.
இந்தியத் தலைமை நீதிபதிகளின் படிநிலையில் கருதப்படும் இவர்கள் ஊதியமும் அவர்கள் அளவிற்கு ஈடாகப் பெறுகின்றனர்.
தலைமைத் தேர்தல் ஆணையரை நடத்தை விதி மீறலைக் (இம்பீச்மென்ட்) காரணம்காட்டி நாடாளுமன்றத்தில் அவர் மீது கொண்டுவரப்படும் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் (ஒட்டெடுப்பில்) தீர்மானம் வெற்றிபெற்றாலின்றி அவரை வேறு எவ்வகையிலும் பணியிலிருந்து நீக்கவியலாது.
இதன் அதிகாரக் கட்டமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இவ்வாணையத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
உலகநாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, இந்தியாவே முதன் முதலாக முழுவதும் மின்னணு எந்திரத்தின் மூலம் பொதுத்தேர்தலை நடத்திக்காட்டியது.
இவ்வாணையத்தின் மீது மக்கள் பார்வை விழக் காரணமாயிருந்தவர் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி. என். சேஷன். அவர் 1990 முதல் 1996ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். அவரின் பணிக் காலத்தில் தான் அதுவரை தேர்தல்களில் ஊழல் மிகுந்திருந்த நிலை அவரின் கண்டிப்புமிக்க, நேர்மையான செயலால் சற்றுத் தணிக்கப்பட்டது.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பட்டியல்:[1]